கருத்து & பகுப்பாய்வு

ஜனாதிபதியின் திருகோணமலை முதலீட்டு வலயம் யாருக்கு உதவப்போகிறது ?

1000 ஏக்கர் நிலப்பரப்பில் திருகோணமலை பிரதேசத்தில் முதலீட்டு வலயமொன்று விரைவில் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இத்திட்டத்துக்கு இந்தியாவின் உதவி பெறப்படுமென்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது மாவட்டத்துக்கு ஆபத்தான திட்டமா? அன்றி அபிவிருத்தியை ஏற்படுத்த கொண்டுவரப்படும் நேர்மையானதிட்டமாக இருக்குமா என்பது பற்றி மிக தெளிவாக சிந்திக்கவேண்டியவர்களாக வாழும் தமிழ் மக்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலை கடந்த வியாழக்கிழமை (24.8.2023) ஜனாதிபதியவர்கள் சீனக்குடா விமான படைத்தளத்தில் நடத்தியிருக்கிறர்.

திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியபோது திருகோணமலையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இணக்கப்பாடு காணப்பட்டிருப்பதாகவும,; இந்த அபிவிருத்தி திட்டத்தின் மூலம் “வெருகல் ஆறு தொடக்கம் பனாமா வரையான கடற்கரையை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.” சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக குறித்த பிரதேசம் பயன்படுத்துப்படும் என ஜனாதிபதி திருகோணமலையில் தெரிவித்துவிட்டு இத்தகவலை அம்பாறையில் வைத்தும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார். புதிய அபவிருத்தி திட்டம் மூலம் இம்மாவட்டத்தை ஒரு முக்கிய வர்த்தக நகரமாக மாற்றவேண்டும், அபிவிருத்தி செயல் முறையில் காணி முக்கிய காரணியாக இருப்பதாகவும் அதனை சரியான முகாமைத்துவத்துடன் பேணப்படாவிட்டால் அபிவிருத்தி இலக்குக்களை அடைய முடியாது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

திருகோணமலை மாவட்டத்துக்கென நடத்தப்பட்ட இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மற்றும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தபோதும் தமிழ்ப்பேசும் அரசியல் தலைமைகள் அழைக்கப்படவில்லை, என்று தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கிற இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திருகோணமலைக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் பெற்றோலியத்திட்டங்கள் மற்றும் இரு நாடுகளுக்கமிடையிலான குழாய் எரி பொருள் பரிமாற்ற திட்டம் தொடர்பாக அவர் வருகையின்போது ஆராயப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதியவர்கள் அவசரம், அவசரமாக திருகோணமலைக்கு வருகை தந்து மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக சீனன்வாடி விமான படைத்தளத்தில் கலந்துரையாடலை நடத்தியிருக்கிறார். பின்பு அம்பாறையில் வைத்தும் திருகோணமலை அபிவிருத்தி வலயம் தொடர்பில் அறிவித்திருக்கிறார்.

இலங்கை ;அரசாங்கத்தைப்பொறுத்தவரை சுதந்திரத்துப்பின் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தியில் எந்த கவனமும் செலுத்தவில்லை என்பது வெளிப்படையாகவே சுட்டிக்காட்டப்படுகிற வி;டயம். இதற்கு பல அரசியல் காரணங்களும், பொருளாதார காரணங்களும் இருக்கிற தென்பதை ஏற்றுக்கொண்டாலும் மாற்றான் தோட்டத்து மல்லிகையாகவே ஆட்சிக்கு வரும் அதிகார வர்க்கத்தினால் பார்க்கப்பட்டிருக்கிறது.

இதற்கு காரணமாக இருப்பது தமிழர்கள் தங்கள் தலைநகரம் திருகோணமலை என அடிக்கடி பிரகடனப்படுத்துவது காரணமாக இருக்கலாம். திருகோணமலை ஒரு வளம் நிறைந்த பிரதேசம் மட்டுமல்ல, உலகத்தின் இரண்டாவது இயற்கை துறைமுகத்தை தன்னகத்தே கொண்ட பிரதேசம்.

அன்னியர் ஆட்சியில் உலக ஏற்றி இறக்கல் துறையாக விளங்கிய திருகோணமலை துறைமுகம் தேசியமயம் என்ற போர்வையில் 1967 ஆம் ஆண்டு (1967.10.28.) கைவிடப்பட்டு கொழும்பு துறைமுகம் பிரதானப்படுத்தப்பட்டது.

இதன்காரணமாக சுமார் 3000 தமிழ் துறை முக தொழிலாளர்கள் பணி விலக நேரிட்டது. 1979 ஆம் ஆண்டு (1979.6.1) துறை முக அதிகார சபையாக மாற்றப்பட்டதன் காரணமாக தமிழர்களுக்கு சொந்தமான வி. எம்.வடிவேலன் பிறதேஸ், ஏ.எஸ்.எம் ஜெகநாதன் கம்பனி, பி. வீரவாகு கம்பனி என். எஸ். தாசன் கம்பனி ரி.ரி.ஏ என்பவை மூடப்பட்டன.

கப்பலுக்கு பண்டங்களை ஏற்றி இறக்கலை தளமாக கொண்ட இக்கம்பனிகளை மூடப்படவேண்டிய அவலம் ஏற்பட்டது. இதை கைவிட்ட அரசாங்கம் ருகுணு பொருளாதார அபவிருத்தி என்ற பெயரில் அம்பான்தோட்டை துறை முகம் அபவிருத்தி செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டு சீனாவுக்கு கையளிக்கும் திட்டம் முன்னெடுகப்பட்டது. திருகோணமலை துறைமுகத்தின்; ஒருபகுதிக்கு அஸ்ரப்துறை முகமென பெயர் சூட்டப்பட்டபோதும் அதனால் எப்பலனையும் திருமலை பிரதேச மக்கள் பெற முடியவில்லை.

திருகோணமலை துறை முக அபிவிருத்தி தொடர்பாக நல்லாட்சி அரசாங்க காலத்தில் (2017 ஆம் ஆண்டு) கவனம் செலுத்தப்பட்டது. சிங்கப்பூர் கம்பனியான சுபராங் நிறுவனத்திடம் இத்திட்டம் கையளிக்கப்பட்டது.

இது திருகோணமலை மெஹா அபிவிருத்தி திட்டம் என அழைக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக கலந்துரையாட சிங்கப்பூர் வாத்தக வாணிபத்துறை அமைச்சரான ஈஸ்வரன் திருகோணமலைக்கு (28.1.2017) விஜயம் செய்திருந்தார்.

திருகோணமலை மெஹா அபிவிருத்தி திட்டம் என பெயர் கொண்ட இத்திட்டம் நான்கு பிரதான விடயங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

திருகோணமலை நகர அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி, சீனக்குடா எண்ணெய்க்குத அபிவிருத்தி,
டொக்கியாட் கடற்படை அபிவிருத்தி என திட்டமிடப்பட்டது.

இத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டால் 250000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் மாவட்டம் முழுவுதும் ; 12 லட்சம் மக்கள் குடியேற வாய்ப்பு ஏற்படும் என்று பேசப்பட்டது. இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது.

திருகோணமலையின் பிரதான கிராமங்கள் குடி பெயரவேண்டிவரும், பழம் பெருமை வாய்ந்த திருகோணமலை நகரம் நகர்த்தப்படும், இனப்பரம்பல் திட்டமிட்டு மாற்றப்படும், தமிழ் மக்களுடைய பாரம்பரியங்களும் பூர்வீகங்களும் அழிக்கப்படும் என்று கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

கல்லோயா திட்டம் தொடக்கம் கந்தளாய், அல்லை, மொறவேவா, கல்லம்பத்தை, திரியாய், சேருநவர, பதவி சிறிபுர, திருமi நகரப்பகுதியில் கொரியா வத்தை, மற்றும் ஆண்டாங்குளம், ஐந்தாம்மைல்கள் என்ற கிராமங்கள் பறி போனமையின் பின்னணி நினைவூட்டப்பட்டது. அதே அவலத்தை இந்த புதிய திட்டம் கொண்டுவரக்கூடும், என்பது கவனமாக ஆராயப்பட்டது.

நல்லாட்சிக்கு ஏற்பட்ட அவலம் காரணமாக திட்டம் அமுல்படுத்தப்படவில்லை. ஏலவே சம்பூர் அனல் மின் நிலையம் தெடர்பான சர்ச்சை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

திருகோணமலை அபிவிருத்தி தொடர்பில் ஒரு நீண்ட வரலாறு உண்டு என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.. 2012 ஆம் ஆண்டளவில் இலங்கை இந்திய நாடுகளுக்கிடையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் திருகோணமலையில் விஷேட பொருளாதார வலயத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வர்த்தக துறை அமைச்சர் (2012.8.3) ஆனந்த சர்மா தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பெறுமதியை இருமடங்காக அதிகரிக்க உடன்படிக்கை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் 2015 ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதே வேளை அங்கு தலையைக்காட்டி இங்கு வாலைக்காட்டிய மஹிந்த அரசு 2014 ஆம் ஆண்டு விமானப்படைக் விஷேட பராமரிப்பு தளம் அமைக்க சீனாவுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றபோது இந்திய தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக சீனக்குடாவில் பாரமரிப்பு தளம் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

இதே போல் திருகோணமலையில் கடற்படை தளம் அமைக்க 2019 ஆண்டு பிரித்தானியா முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2017 ஏப்ரல் மாதமளவில் இந்தியா சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருகோணமலை துறைமுகத்தின் அபவிருத்தி செயற்பாட்டில் கூட்டு செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு வந்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருகோணமலை சக்தி உள்சார் கட்டமைப்பை மேம்படுத்தல், மற்றும் பொருளாதர தொழில் நுட்ப அபிவிருத்தி உடன்படிக்கை செய்யப்பட்டது. இது (எட்கா) என அழைக்கப்பட்டது.

இதுவும் நடை முறைப்படுத்தப்படுவதற்குமுன் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து இறக்கப்பட்டதன் காரணமாக மேற்படி உடன்படிக்கை அமுலாக்க வாய்ப்பில்லாமல் போனது. மீண்டும் தனது முன்னைய முயற்சியை கைவிடாத விக்கிரமாதித்தன் போல் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரம சிங்க கடந்த வருடம் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த நிலையில் (2022.10.14) ஓர் செய்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

“திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. திருமலை அபிவிருத்தி மூலோபாய திட்டமானது தேர்தலை இலக்காக கொண்டதல்ல. இது எதிர்கால சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம். இத்திட்டத்தின் பிரகாரம் துறைமுக அபிவிருத்தி, எண்ணெய்வள அபிவிருத்தி இணைந்து செயற்படுத்தவுள்ளோம்” என தெரிவித்திருந்தார்.

இத்திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல அனைத்து கட்சிகளும் எதிர்க்கவேண்டும் இது இந்தியாவுக்கு இலங்கையை தாரைவார்த்துக்கொடுக்கும் சதி என தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

(28.6.2022) வீரகேசரி. தற்போது ஜனாதிபதி முன்னெடுத்திருக்கும் திருகோணமலை 1000 ஏக்கர் முதலீட்டு வலயத்துக்கு வருவோம். திருகோணமiயில் திட்டத்தை செயற்படுத்தும் போது சுமார் 1000 ஏக்கர் பரப்பில் முதலீட்டு வலயம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தினால் இப்பிரதேச மக்கள் நன்மை பெறுவர் என்பது ஒரு சாதகமாக கருதினாலும் இத்திட்டத்தின்பால் தமிழ் இளைஞர்கள் நன்மை அடைய முடியுமா? என்பது ஒரு அபாயமான கேள்வி. இங்கு ஆரம்பிக்கப்படவுள்ள துறைக்கு துறை சார்ந்த வல்லுனர்கள் இல்லையாயின் பிற மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுவார்கள்.

இதனால் இனப்பரம்பலில் மாத்திரமல்ல பொருளாதார மற்றும் ஏனைய வசதிகளிலும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும். திருகோணமலை மாவட்டத்தில் தற்போதுள்ள இனவிகிதாசாரத்தில் இரண்டாம் நிலையிலுள்ள தமிழர்கள் மூன்றம் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

கடந்த 40 வருடங்களுக்கு முன் முதல் நிலை வகித்த தமிழர்தம் இனம்பரம்பல் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

இன்னொரு அபிவிருத்தியாக கருதப்படுவது திருமலையை ஒரு சிறந்த சுற்றுலாப்பிரதேசமாக மாற்றுவது என்பதாகும். அண்மையை கணக்கெப்பின்படி திருகோணமலை மாவட்டத்தில் பங்களா, ஹொட்டல், விடுதிகள,; வீட்டுவகைகள் மற்றும் வி;ல்லா என்ற வகையில் சுமார் 29 எண்ணிக்கை காணப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன மறுபுறம் பதிவு செய்யப்படாதவை 60 மேற்பட்டவை காணப்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

இதில் 80 வீதமானவை பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுடையது அதே போன்று 75 வீதத்துக்கு மேற்பட்ட ஹொட்டல் பணியாளர்கள் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.. இங்குளள உல்லாச தலம் முழுவதும் பிற இனத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டவையாகவே காணப்படுகின்றன.

இன்னொரு துறை மீன்பிடித்துறை திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 124 மீனவக்கிரமங்கள் அடையாளப்படுத்தப்பட்டு 31 840 மீனவர்கள் இத்தொழில் ஈடுபடுவதாக எடுத்துக்கூறப்படுகிறது.

இதில் 70 வீதமானவர்கள் வந்தேறு குடிகள் குறிப்பாக யுத்த முடிவுக்குப்பின் குடியேற்றப்பட்டவர்கள். கிராமங்களில் 60 வீதமானவை அவ்வாறே. திருகோணமலை மாவட்டத்திக் காணி தொடர்பான சர்ச்சை தொடாந்து இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.

வனபரிபாலனம் இராணுவ முகாம் விஸ்தரிப்பு பௌத்த விகாரை விஸ்தரிப்பு , உல்வாசப்பயணத்துறை, கைத்தொழில் அபவிருத்தி பொருளாதார முயற்சிகள் என்ற கோதாவில் பெருந்தொகையான அரச காணிகள் தரிசு நிலங்கள் மேய்ச்சல் நிலங்கள் விவசாய நிலங்கள் கையப்படுத்தும் கெடுபிடிகள் தொடாந்து இடம் பெற்றுவரும் நிலையில் ஜனாதிபதியின் முதலீட்டு வலயம் தமிழ் மக்களுக்கு பனுடையதாக இருக்குமா பறிபோகும் நிலையை உருவாக்குமா என்பதுபற்றி யாரும் ஆரிடம் கூற முடியாது ஏலலே கந்தளாய் சீனித்தொழிற்சாலை புல் மூட்டை கனிய வள தொழிற்சாலை சீனக்குடா மா ஆலைக ப்ப்துறை வென்டோல் பாம் தொழிற்சாலை, கும்பிறுபிட்டி உப்புத் தொழிற்சாலை என ஏராளமானவற்றை பறிகெடுத் நிலையிலையே தமிழ் குடிகள் காணப்படுகிறார்கள். இவ்வாறானதொரு சூழ் நிலையில் ஜனாதிபதியின் முதலீட்டு வலயம் யாருக்கு உதவ முடியும்.

(திருமலை நவம்)

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை

You cannot copy content of this page

Skip to content