பதுளை- புஸ்ஸல்லாவ பகுதியில் விபத்து : நால்வர் காயம்!
பதுளை பிரதான வீதியின் படல்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் பஸ் ஒன்று பௌசர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (19.08) இடம்பெற்றுள்ளது. இதில் பேருந்தின் சாரதி, நான்கு பயணிகள் காயமடைந்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் கவலைக்கிடமான நிலையில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.