இலங்கை

புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளான லொறி : ஒருவர் பலி!

  • September 28, 2023
  • 0 Comments

மீட்டியாகொட, கஹாவ பகுதியின் கொடகம புகையிரத கடவையில் சிறிய ரக லொறியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (28.09) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் லொறியில் பயணித்த 40 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில்,பலபிட்டிய ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் பத்தேகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை விளையாட்டு

’மீண்டும் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்’- தனுஷ்க

  • September 28, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி நீதிமன்றத்தால் குற்றச்சாட்டில் நிரபராதி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் முதல் முறையாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வீரர், “தீர்ப்பே அனைத்தையும் தெளிவுபடுத்திக் கூறுகிறது” என்றார். “கடந்த பதினொரு மாதங்கள் எனக்கு கடினமாக இருந்தது. எனது முகாமையாளர், எனது வழக்கறிஞர்கள், குறிப்பாக முருகன் தங்கராசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு உதவிய […]

பொழுதுபோக்கு

தீவிர ரசிகர் மரணம்… வீட்டுக்கே சென்று அஞ்சலி செலுத்தினார் சூர்யா

  • September 28, 2023
  • 0 Comments

ரசிகர்கள் மீது அக்கறை காட்டும் நடிகராக சூர்யா இருந்து வருகிறார். அடிக்கடி ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதையும் சூர்யா வழக்கமாக வைத்துள்ளார். இதுதவிர ரசிகர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார் சூர்யா. கடந்த ஜூலை மாதம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக பேனர் வைத்தபோது ஆந்திராவை சேர்ந்த அவரது ரசிகர்கள் இருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அறிந்த சூர்யா சோகத்தில் மூழ்கிப்போனார். ரசிகர்களின் மறைவால் அவர் தன்னுடைய பிறந்தநாளையும் கொண்டாடவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மறைந்த […]

இலங்கை

இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • September 28, 2023
  • 0 Comments

இலங்கையின் பலப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை, கண்டி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின்  பல பிரதேசங்களுக்கு இன்று (28.09) முதல் நாளை காலை 06.00 மணிவரை 02ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வருமாறு, களுத்துறை மாவட்டம் – இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவு கண்டி மாவட்டம் – பஸ்பகே […]

வேலை வாய்ப்பு

இலங்கை மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதவி வெற்றிடங்கள்

  • September 28, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவற்றிற்குள் தற்போது 4,000 க்கும் மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் காணப்படுவதுடன், இது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவற்றை இயக்குவதற்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் தற்போதைய பணியாளர்கள் போதுமானவர்கள். “பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில், மூவாயிரத்து 292 அங்கீகரிக்கப்பட்ட […]

பொழுதுபோக்கு

லியோ ‘Badass’ ப்ரோமோ வீடியோ வெளியானது..

  • September 28, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. உலகமெங்கும் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை […]

வட அமெரிக்கா

காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த ஆடுகளை பயன்படுத்தும் அமெரிக்கா

  • September 28, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக காய்ந்த புல்லை வெள்ளாடுகளை விட்டு மேய விடுவதன் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அங்கு ஆண்டுதோறும் சராசரியாக 40 லட்சம் ஏக்கர் காடுகள் காட்டுத்தீக்கு இரையாகி வருகின்றன. கோடை வெயிலில் காய்ந்த புற்களும், மண்டிக்கிடக்கும் புதர்களும் காட்டுத்தீ பரவலை அதிகரிப்பதால் அவற்றை அப்புறப்படுத்த தீயணைப்புத்துறையினர், பாடசாலை நிர்வாகங்கள் இன்னும் சில நிறுவனங்களும் ஆடுகளை வாடகைக்கு எடுத்து மேயவிட்டு வருகின்றனர். ஒரு ஆட்டு […]

வட அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கத்திடம் 4 நாட்கள் நிதி மாத்திரமே எஞ்சியுள்ளதாக தகவல்!

  • September 28, 2023
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கம் பொதுச் சேவைகளுக்குச் செலவிட இன்னும் 4 நாட்களுக்கான நிதி மட்டுமே இருப்பில் உள்ளது. பல்லாயிரம் வேலைகள் தற்காலிகமாக முடங்கிப் போகும் அபாயம் நீடிக்கிறது. நவம்பர் 17ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு நிதி வழங்க வகை செய்யும் இடைக்கால மசோதாவை செனட் சபை அங்கீகரித்துள்ளது. ஆனால் குடியரசுக் கட்சி மக்களவை உறுப்பினர்கள் முன்பே அதை நிராகரித்து விட்டனர். நாளை மறுநாளுக்குள் இடைக்கால மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். நாளை அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவிருப்பதாக மக்களவை நாயகர் […]

உலகம்

ஈராக் திருமண மண்டபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தீச்சம்பவம் – பலர் கைது

  • September 28, 2023
  • 0 Comments

ஈராக் திருமண மண்டபத்தில் 100க்கு அதிகமானோரின் உயிரை பறித்த தீ விபத்து தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண மண்டப உரிமையாளர், ஊழியர்கள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர் என செய்தி வெளியாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக 3 நாள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் முகமது ஷியா அல் சுடானி (Mohamed Shia al-Sudani) அறிவித்தார். திருமண விழாவின் போது நடந்த வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டது. விருந்தினர்கள் நிரம்பியிருந்த மண்டபத்தை நெருப்பு சூழ்ந்தது. எளிதில் […]

இலங்கை

தூங்கா நகரங்களாக மாற்றமடையும் இலங்கையின் பல பகுதிகள்!

  • September 28, 2023
  • 0 Comments

இலங்கையில் இந்த வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே இதனை தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பதில் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் […]