ஐரோப்பா

மரத்திலிருந்து கொட்டும் நீரூற்று… கிராமத்தில் தொடரும் அதிசயம்!- வைரலான வீடியோ

  • November 22, 2023
  • 0 Comments

தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு கிராமத்தில் 150 வருட பழமையான மரத்திலிருந்து நீரூற்று மூலம் தண்ணீர் வெளியேறி வருவது உலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மொண்டினீக்ரோவில் உள்ள டைனோசா கிராமத்தில் இந்த மல்பெரி மரம் உள்ளது. இந்த மரத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில மாதங்களில் நீரூற்று வெளிப்படுகிறது. அப்போது மரத்தின் துளையிலிருந்து நீரூற்று பீய்ச்சி அடிக்கிறது. இந்த ஆண்டு தற்போது அந்த நிகழ்வு நடக்கத் தொடங்கியுள்ளது. சயின்ஸ் கேர்ள் என்ற ட்விட்டர் கணக்கில் இதுகுறித்த […]

உலகம்

வடக்கு வனுவாட்டுவில் நிலநடுக்கம் பதிவு : சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

  • November 22, 2023
  • 0 Comments

வடக்கு வனுவாட்டுவில் இன்று (22.11)  6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதிகாரிகள் , கடல் கண்காணிப்பு கருவிகளால் “சிறிய சுனாமி அலைகள்” உருவாகியுள்ளதாக  எச்சரித்துள்ளனர். நிலநடுக்கம் 22 கிலோமீட்டர் (14 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர வனுவாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் “கவனமாக இருக்க வேண்டும் என்றும், சாதாரண எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும்  பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் […]

பொழுதுபோக்கு

என்னது முடியப்போகுதா? வைரலாகும் போஸ்ட்… என்ன நடக்கப்போகுது?

  • November 22, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒரு பிரியமான சீரியலின் முடிவைப் பற்றிய வதந்திகள் பரவியதால் ரசிகர்களை அதிர்ச்சி அலைகள் தாக்கியது, இது பார்வையாளர்களிடையே பரவலான கவலையையும் தூண்டியது. ஜூலை 9, 2018 அன்று தொடங்கப்பட்ட “ஈரமான ரோஜாவே” என்ற தொடரானது பார்வையாளர்களின் இதயங்களை விரைவாகக் கைப்பற்றியது. முதல் சீசன் மூன்று வருட ஓட்டத்தை தொடர்ந்து, ஆகஸ்ட் 14, 2021 அன்று முடிவடைந்தது. அதன் தொடர்ச்சியான “ஈரமான ரோஜாவே 2” ஜனவரி 17, 2022 அன்று அறிமுகமானது, திரவியம் ராஜகுமாரனை நாயகனாகப் […]

இலங்கை

யாழ் இளைஞன் படுகொலை விவகாரம் : வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக நீதிபதி சிறைச்சாலை விஜயம்!

  • November 22, 2023
  • 0 Comments

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார். அதேவேளை உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு இளைஞனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் பொலிசாரின் சித்தரவதை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். இளைஞனின் உயிரிழப்பு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க […]

பொழுதுபோக்கு

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் மம்மூட்டி? பல நாடுகளில் தடை..

  • November 22, 2023
  • 0 Comments

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படம் வருகிற நவ.23 ஆம் தேதி வெளியாகிறது. அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் (மம்மூட்டி) தன் மனைவி ஓமணா (ஜோதிகா) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ஒருநாள், தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு திரும்புகையில் ஊராட்சி […]

உலகம்

பிரேசிலில் வாட்டி வதைக்கும் வெப்பம் – கவலையில் மக்கள்

  • November 22, 2023
  • 0 Comments

பிரேசிலில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் கொளுத்தும் வெயில் மக்களை வாட்டி வதைப்பதாக தெரியவந்துள்ளது. அங்கு என்றும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை 44.8 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. பிரேசிலின் அராஸுவாய் (Araçuaí) நகரில் அந்த வெப்பநிலை பதிவானது. El Nino பருவநிலை மாற்றம் இந்த மிதமிஞ்சிய வெப்பநிலை ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது. வெப்பம் இந்த வாரம் தணியக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 3 மாநிலங்களில் மட்டுமே வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும் என்று பிரேசில் […]

இலங்கை

இலங்கை கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • November 22, 2023
  • 0 Comments

இலங்கையில் நான்கு வருடங்களை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதனை தெரிவித்துள்ளார். இன்று (22) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார். இதன்படி, 10ம் ஆண்டில் பொதுத் தரப் பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், 17 வயதில் ஒரு மாணவன் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

ஐரோப்பா

இத்தாலி நடுக்கடல் விபத்து – சிக்கி தவித்த 616 புலம்பெயர்ந்தோர் – சிறுமி பலி

  • November 22, 2023
  • 0 Comments

இத்தாலி தீவான லம்போடுசாவில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் சிக்கி தவித்த புலம்பெயர்ந்தோர் 40 பேரை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். இதில் 2 வயது சிறுமி ஒருவர் பலியானார் 8 பேர் காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று மற்றொரு படகில் நடுக்கடலில் சிக்கி தவித்த 576 புலம்பெயர்ந்தோரும் கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இத்தாலி கடல் வழியாக புலம் பெயர்ந்துள்ளதாக […]

பொழுதுபோக்கு

சா்ச்சை பேச்சு: நடிகா் மன்சூா்அலிகான் மீது வழக்கு

  • November 22, 2023
  • 0 Comments

நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகா் மன்சூா்அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனா். நடிகை த்ரிஷா குறித்து நடிகா் மன்சூா்அலிகான் சா்ச்சைக்குரிய வகையில் அண்மையில் கருத்து தெரிவித்தாா். இந்தப் பேச்சுக்கு திரைத் துறை மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள், எதிா்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், மன்சூா் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிா் ஆணையம் திங்கள்கிழமை பரிந்துரை […]

இலங்கை

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை – மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

  • November 22, 2023
  • 0 Comments

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் கண்டி – கொழும்பு வீதியில் பேராதனை நகரில் 4 கடைகள் மீது ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவில் கடையில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் நேற்று இரவே ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இடத்தில் இதற்கு முன்னரும் மண்சரிவு ஏற்பட்டதால், கடைக்காரர்களை அங்கிருந்து […]