“அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்”- வினோ நோகராதலிங்கம் MP குற்றச்சாட்டு
நடிகர் அஜித் நடித்த தென்னிந்திய திரைப்படமான ”சிட்டிசன்”என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமமே காணாமல் போகும்.அதேபோன்றே இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு அங்கு இருக்காது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான வினோ நோகராதலிங்கம் குற்றம்சாட்டினார். அப்படி ஒரு தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் வேலைகளையே அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனமும் அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். […]