பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதியை காவலில் எடுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டே நெதர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மேலும், “போதைப்பொருள் மீதான போர்” தொடர்பாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹாங்காங்கிற்கு ஒரு பயணத்திலிருந்து திரும்பிய பின்னர், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் டுடெர்ட்டே கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் ரோட்டர்டாமிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார்.
ஒரு அறிக்கையில், 79 வயதான டுடெர்ட்டே, “மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதற்காக விசாரணைக்கு முந்தைய அறை பிறப்பித்த கைது வாரண்டின்படி பிலிப்பைன்ஸ் குடியரசின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்” என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
அவர் வரும் நாட்களில் ஹேக்கில் உள்ள ஐசிசி நீதிபதி முன் முதற்கட்ட விசாரணைக்காக ஆஜர்படுத்தப்படுவார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் டச்சு கடற்கரையில் உள்ள ஒரு தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
ஹேக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் முதல் ஆசிய முன்னாள் அரச தலைவராக அவர் மாறக்கூடும்.