புதிய டெஸ்லா காரை வாங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர் தோழனான எலான் மஸ்க் நடத்தும் கார் நிறுவனமான டெஸ்லாவுக்கு அண்மை காலமாக விளம்பரம் செய்து வருகிறார்.
டெஸ்லா காரை அனைவரும் வாங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் தனக்கென சிவப்பு நிற மாடல் S டெஸ்லா காரை டிரம்ப் வாங்கியுள்ளார்.
டெஸ்லா நிறுவன கார்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்காவில் எழுந்துள்ளன. மேலும் பங்குச்சந்தையில் அந்நிறுவனம் சரிவைச் சந்தித்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், மஸ்க்கின் கார்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க, டெஸ்லா கார் வாங்குவதாக டிரம்ப் சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகை வளாகத்தில் டெஸ்லா கார்களில் காட்சிப்படுத்தல் நிகழ்ந்தது. அப்போது பல வகை டெஸ்லா மாடல் கார்களை பார்வையிட்ட டிரம்ப், தனக்கு பிடித்தது என கூறி மாடல் S சிவப்பு நிற காரை விலைக்கு வாங்கியுள்ளார்.
எலான் மஸ்க் தள்ளுபடி அளிப்பதாக கூறியும் அதை ஏற்காத டிரம்ப், காரின் உண்மை விலையான 76,880 டாலர கொடுத்து வாங்கியுள்ளார்.