ஆசியா

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு!

  • November 28, 2023
  • 0 Comments

வடகிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று (28.11) ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில் உள்ள சுரங்கத்திலேயே குறித்த விபத்து  நடந்ததாக மாநில ஒளிபரப்பு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகம்

மோசமான நிலையில் 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்கள்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததுள்ளது இந்நிலையில், கட்டார் நாட்டின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக, கூடுதலாக 2 நாட்களுக்கு போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. கத்தார் அறிவித்த இரண்டு கூடுதல் நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம், மேலும் நீட்டிப்புகளுக்கான நம்பிக்கையை எழுப்பியது, தற்காலிக போர் நிறுத்தமாவது தேவை என உலக நாடுகள் வலியுறுத்தின. இதற்காக கத்தார், எகிப்து, அமெரிக்கா போன்ற நாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக 4 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் […]

இந்தியா

உத்தரகாண்ட் சுரங்க விபத்து..பத்திரமாக மீட்கப்பட்ட 10 தொழிலாளர்கள்!

  • November 28, 2023
  • 0 Comments

கடந்த நவம்பர் 12 ஆம் திகதி இந்தியாவின் உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 பணியாளர்கள் சுமார் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு இப்பொது ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் நலமோடு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிவு கடந்த 12 நவம்பர் 2023 அன்று ஏற்பட்டது, இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த சில்க்யாரா வளைவு – பர்கோட் சுரங்கப்பாதையின் ஒரு […]

ஐரோப்பா

போருக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் தேர்தல் வெளியான முக்கிய அறிவிப்பு

ரஷ்யாவின் நாடாளுமன்ற மேலவையானது மார்ச் 13ஆம் திகதி அதிபர் தேர்தல் திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜெனடி ஜியுகனோவ் தெரிவித்துள்ளார். ரஷ்ய சட்டத்தின்படி, வாக்கெடுப்புக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தின் மேல் சபை சரியான திகதியை அறிவிக்க வேண்டும். தேர்தல் நாள் பரவலாக மார்ச் 17 என்று கருதப்படுகிறது. ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் , மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து இன்னும் கூறவில்லை, இருப்பினும் அவர் மீண்டும் போட்டியிடுவார் […]

இலங்கை

யாழில் விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் படங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணித்த நபர் கைது!

  • November 28, 2023
  • 0 Comments

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் இன்றையதினம் (28.11)   யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார். கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே மேற்படி  கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று (27.11) மாலை இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வின்போது,  தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் […]

பொழுதுபோக்கு

“என்னை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் இவர் தான்” போட்டுடைத்தார் ஷகிலா..

  • November 28, 2023
  • 0 Comments

பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலாவும் தனக்கு நடந்த அட்ஜெஸ்மெண்ட் சம்பவம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார். பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ விசித்ரா எனது தோழி தான். இருவரும் சேர்ந்து சில படங்களில் பணியாற்றியுள்ளோம். தனது அனுபவத்தை அவர் மனம் திறந்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் அதை யார் செய்தார் என்பதையும், அந்த ஹீரோவின் பெயரையும் விசித்ரா குறிப்பிட்டிருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஷகிலா “நான் இன்னும் தெலுங்கு திரையுலகில் […]

இலங்கை

யாழ். சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

  • November 28, 2023
  • 0 Comments

யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து, ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வட அமெரிக்கா

கொலம்பியாவில் சிறுமியின் மூளையைத் தின்று, ஆளைக் கொன்ற அமீபா; நீச்சல்குளங்களை நாடுவோருக்கு எச்சரிக்கை!

  • November 28, 2023
  • 0 Comments

இப்படியும் மரணம் சம்பவிக்குமா என்றஅதிர்ச்சியூட்டும் செய்திகளின் வரிசையில் கொலம்பியாவை சேர்ந்த சிறுமி ஒருவரின் இறப்பு சேர்ந்திருக்கிறது. நீச்சல் குளங்கள் மற்றும் சரியாக சுத்தம் செய்யப்படாத நீர்நிலைகளில் நீராடுவோருக்கு, அங்கு காத்திருக்கும் ஆபத்தை இந்த சிறுமியின் மரணம் பாடமாக உணர்த்தி இருக்கிறது. ஸ்டெபானியா வில்லமிசார் கோன்சாலஸ் என்ற 10 வயது சிறுமி சதா துறுதுவென இருப்பார். டென்னிஸ், ஸ்கேட்டிங், பாலே நடனம், ஜிம்னாஸ்டிக் என பலவற்றிலும் தீவிரமான ஆர்வம் கொண்டிருந்தார். எதிர்காலத்தில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக வேண்டும் என்ற கனவும் […]

இலங்கை

07 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பிரஜைகளுக்கு கட்டணம் இல்லாமல் விசா வழங்குவதற்கான நிபந்தனைகள் வெளியீடு!

  • November 28, 2023
  • 0 Comments

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 7 வெளிநாடுகளில் இருந்து வரும் பிரஜைகளுக்கு இலங்கை வந்தவுடன் கட்டணம் அறவிடாமல் விசா வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒக்டோபர் 24ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீன, இந்திய, இந்தோனேசிய, ரஷ்ய, தாய், மலேசியா மற்றும் ஜப்பானிய பிரஜைகளுக்கு மார்ச் 31, 2024 வரை கட்டணம் வசூலிக்கப்படாமல் விசா முறை நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வருமாறு, […]

உலகம்

புலம்பெயர்ந்தோர் கடத்தலுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்த நைஜர் தலைவர்கள்

நாட்டில் புலம்பெயர்ந்தவர்களைக் கடத்துவதைக் குற்றமாக்கும் எட்டு ஆண்டுகள் பழமையான சட்டத்தை நைஜரில் ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவர்கள் ரத்து செய்துள்ளனர். நைஜரின் பாலைவனம் வழியாக லிபியா மற்றும் ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தோரை கடத்திய கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால் மத்தியதரைக் கடல் முழுவதும் மக்கள் பாய்வதைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்றிய ஜனாதிபதி மொஹமட் பாஸூம் ஜூலை மாதம் ஆட்சிக் கவிழ்ப்பில் தூக்கியெறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெனரல் அப்துரஹ்மானே […]