பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் பதவி விலகல் கோரிக்கையை நிராகரித்தார் மக்ரோன்!
பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் பதவி விலகுவதற்கான கோரிக்கையை மக்ரோன் நிராகரித்துள்ளார். அதற்கு பதிலாக முட்டுக்கட்டையை உடைத்து சட்டத்தை நிறைவேற்ற புதிய வழிகளைக் கண்டறியுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரான்ஸில் தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ஆட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், சர்சைக்குரிய குடியேற்ற மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பிரதமர் எலிசபெத் போர்ன் திங்கள்கிழமை மாலை பல அமைச்சர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் அடங்கிய அவசரக் கூட்டத்தை நடத்தினார். ஜனாதிபதியின் […]