இலங்கை

நாட்டை விட்டு வெளியேறும் முயற்சில் சுமார் 5000 வைத்தியர்கள் – வைத்தியர் விஜயரத்தினசிங்கம் தர்ஷன்

  • September 2, 2023
  • 0 Comments

சுமார் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் விஜயரத்தினசிங்கம் தர்ஷன் தெரிவித்துள்ளார்.நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கும் வைத்தியர்களில் 95 வீகிதத்துக்கு மேற்பட்டவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இலங்கை பொருத்தவரையில் வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட பெரும்பான்மையினை நாங்கள் பிரதிபலிக்கின்றோம், இவ்வாறான ஒரு தொழிற்சங்கமாக இருக்கின்ற […]

இலங்கை

கீரி சம்பா அரிசியை பதுக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

  • September 2, 2023
  • 0 Comments

கீரி சம்பா அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் இன்று (02.09) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்த இடங்களும், சட்டவிரோதமாக அரிசியை பதுக்கி வைத்துள்ள இடங்களும் இனங்காணப்பட்டுள்ளன. அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகஸ்ட் 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2278/02 இன் படி கீரி […]

ஆசியா

பாக். பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை – ராணுவ மேஜர் உட்பட மூவர் பலி

  • September 2, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் வடக்கு வாரிஸ்தான் மாவட்டத்தில் ஷா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் அமிர் அஸிஸ் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மிரான் ஷா பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து ராணுவ மேஜர் அமிர் அஸிஸ் தலைமையில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் தரப்பில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், கைபர் மாவட்டம் திரா பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் […]

இலங்கை

மறைந்த இளம் ஊடகவியலாளர் பிரகாஸ் நினைவாக இரத்ததான முகாம்!

மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை(02) யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பெருமளவானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளனர். பிரகாஸினுடைய நண்பர்களின் ஏற்பாட்டில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தரம் […]

தமிழ்நாடு

கோவை-ரத்தினபுரியில் இரு கார்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள்

  • September 2, 2023
  • 0 Comments

கோவை ரத்தினபுரி பகுதியில் இரண்டு கார்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரத்தினபுரி நேரு வீதியில் உள்ள பள்ளி அருகே அந்தப் பகுதியை சேர்ந்த இரண்டு பேர் நேற்று இரவு தங்களது கார்களை நிறுத்தியிருந்தனர். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு கார்களுக்கும் தீ வைத்து தப்பி சென்றதாக தெரிகிறது. கார் மளமளவென தீ பிடித்து எரிவதை கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் […]

இலங்கை

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கு கிடைத்த அங்கீகாரம்!

  • September 2, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான 21 உலக ‘A’ தர மத்திய வங்கி ஆளுநர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார். நியூயோர்க்கை தளமாகக் கொண்ட “குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை” வருடாந்தம் நடத்திய கணக்கெடுப்பின்படி, அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல், “குளோபல் ஃபைனான்ஸ் இதழ்”, பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி, நிதி நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை ஆகியவற்றில் அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக மத்திய வங்கி […]

இலங்கை

யாழில் இளம் வியாபாரியொருவர் கடத்தல்! பொலிஸார் தீவிர விசாரணை

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் 23 வயதுடைய வியாபாரியொருவர் பட்டப்பகலில் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வியாபாரி கடத்தப்பட்டதாக கோப்பாய் பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் 10 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வாகனம் ஒன்றில் வருகை தந்த 12 பேர் கொண்ட கும்பல், பழ வியாபாரியை தாக்கிவிட்டு அவரை கடத்திச் சென்றதாகவும் முறைப்பாட்டில் […]

இலங்கை

இன்று ஆரம்பமான ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தினை நோக்கிய பாதயாத்திரை பயணம்

  • September 2, 2023
  • 0 Comments

இலங்கையில் யாத்திரை செல்லுத் திருத்தலங்களில் ஒன்றாகவும் கிழக்கில் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தினை நோக்கிய பாதயாத்திரை பல்லாயிரக்கணக்கான அடியார்களுடன் இன்று அதிகாலை ஆரம்பமானது. வடக்கில் மடுமாதா திருத்தலமும் கிழக்கில் ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயமும் பக்தர்கள் யாத்திரை செல்லும் திருத்தலங்களாகயிருந்துவருகின்றது. ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தின் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் இன்று மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் நடாத்தப்பட்ட வழிபாடுகளை தொடர்ந்து பாத யாத்திரை […]

உலகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.00 அமெரிக்க டொலராக உள்ளது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்தில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் தற்காலிகமாக மூடப்படும் 150 பள்ளிகள்..!

  • September 2, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக கிட்டத்தட்ட 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கோடை விடுமுறைகள் நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இதற்கிடையில் பிரித்தானியாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மோசமான கான்கிரீட் தள கட்டிடங்களில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இத்தகைய பள்ளி கட்டிடங்கள் எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழுந்து விடலாம் என்ற அபாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிரித்தானியாவில் மோசமான கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. […]

You cannot copy content of this page

Skip to content