பொழுதுபோக்கு

“ஆரம்பிக்கலாங்களா????” பிக் பாஸ் சீசன் 7 – டி.ஆர்.பி எகிறப்போகுது….

சின்னத்திரை ரசிகர்களின் இஷ்டமான என்டர்டைன்மெண்ட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசர்களை வெற்றிகரமாக நிறைவு செய்து 7-வது சீசனை வரும் அக்டோபர் 8ம் தேதி துவங்கப் போகின்றனர்.

இதற்கான போட்டியாளர்களை பார்த்து பார்த்து விஜய் டிவி தேர்வு செய்து வருகிறது.

இதற்கிடையில் படத்தைக் காட்டிலும் உலக நாயகன் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்கு அதிகமாகவே சம்பளம் வாங்கி வருகிறார்.

அதிலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை இந்த முறை அவர் தொகுத்து வழங்குவதற்கு 130 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் சுமார் 65 கேமராக்கள் இருந்து போட்டியாளர்களின் நோட்டமிட்டு கொண்டிருந்த நிலையில், இந்த முறை 76 கேமராக்களை பொருத்தி இன்னும் சுவாரசியத்தை கூட்ட பார்க்கின்றனர். இந்த முறை பஸ் பெண் ஓட்டுனர் ஷர்மிளா கலந்து கொள்ள போகிறார்.

இவர் ஏற்கனவே உலக நாயகன் கமலஹாசனை சந்தித்து காரை பரிசாக பெற்றவர். அதுமட்டுமல்ல சோசியல் மீடியாக்களும் இப்போது ரொம்பவே ஆக்டிவாக இருக்கிறார். இவரைப் போன்ற இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டக்கூடிய சின்னத்திரை மற்றும் மாடலிங் துறையை சேர்ந்த தரமான போட்டியாளர்களை விஜய் டிவி தரையிறக்க உள்ளது.

See also  தளபதி 69 - இல் இணைந்த அனிமல் வில்லன்... விஜய்யின் திட்டம் தான் என்ன?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் சூட் ஏற்கனவே முடிந்த நிலையில், விரைவில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக போகிறது. விஜய் டிவியின் சீரியல்களும் கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி-யில் டாப் 5 இடத்தை பிடிக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் மலை போல் நம்பி இருக்கின்றனர். அதற்காக தான் கமலுக்கும் 130 கோடியை வாரி இறைத்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content