உலகளவில் சாதனை படைத்த மாமன்னன்!
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த மே – 29 திரையரங்குகளில் வெளியானது.
படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மேலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, கடந்த ஜூலை – 27 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், மாமன்னன் நெட்பிளிக்ஸில் இதுவரை 12 லட்சம் பார்வைகளைக் கடந்து அசத்தியதுடன் இந்திய அளவில் முதலிடத்திலும் உலகளவில் 9-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்து வருகிறது.
(Visited 7 times, 1 visits today)