Tamil News

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்… அஜித்தின் விடாமுயற்சிக்கு சிக்கலா?

இஸ்ரேல் – பாலஸ்தீன் போரால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்குக்கு சிக்கல் எழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அஜித். அவரது 62ஆவது படமாக இது உருவாகிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட அடுத்ததாக மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

மகிழ் திருமேனியும் அட்டகாசமான இயக்குநர் என்பதால் துணிவு படம் போலவே விடாமுயற்சியும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

பல தடைகளுக்குப்பறகு விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

அஜர்பைஜான் நாட்டில் நடக்கும் ஷூட்டிங்கில் அஜித், த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்டு துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங் நடத்தவும் மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன் நாட்டுக்கும் கடந்த சில நாட்களாக போர் நடைபெற்றுவருகிறது. அந்த போரின் தாக்கம் துபாய், அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளில் கண்டிப்பாக எதிரொலிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.

அதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கும் ஏதேனும் சிக்கல் எழலாம் என கூறப்படுகிறது.

Exit mobile version