Tamil News

‘மூன்றாம் கண்’ முதல் தோற்றம் வெளியானது…

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள மூன்றாம் கண் படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் சசோ கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மூன்றாம் கண்’. இந்த படத்தில் விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே. சசிகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அஜீஸ் இசை அமைக்கிறார்.

ஹைப்பர்லிங்க் கிரைம் திரில்லராக உருவாகவுள்ளது. ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன், நடிகர் ஆர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

 

Exit mobile version