ஐரோப்பா

பிரான்ஸில் களமிறங்கிய அதிரடிப்படையினர் – பலர் கைது

பிரான்ஸில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிரடிப்படையினரான CRS, RAID,BRI மற்றும் பெருமளவான பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். நீம் (Nîmes) நகரில் இந்தப் பாரிய நடவடிக்கை நடாத்தப்பட்டுள்ளது.

நீம் பெருநகரிலுள்ள இலுள்ள Gard நகரத்தின் Pissevin குடியிருப்புப் பகுதியில் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் பெருமளாவான போதைப்பொருட்கைளக் கைப்பற்றியதுடன் 20 பேரினைக் கைது செய்துள்ளனர்.

250 இற்கும் மேற்பட்ட படையினரும் 75 விசாரணைப்பிரிவினரும் நடாத்திய இந்த நடவடிக்கையில் 1.2 கிலோகிராம் கொக்கெய்ன், 500 எக்ஸ்டெசி மாத்திரைகள், 7 கிலோகிராம் கஞ்சா, பல்லாயிரக்கணக்கான பணம் மற்றும் பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்படியான நடவடிக்கைகள் பல சிலவாரங்களிற்கு முதல் 93 இன் பிரதன நகரங்களில் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content