பொழுதுபோக்கு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் : வெளியான ஹாட் அப்டேட்ஸ்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேலாக தயாரிப்பில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கங்குவா நவீன உலகிலும் கால உலகத்திலும் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்கிறது. இப்படம் அடர்ந்த காடுகளில் படமாக்கியுள்ளனர்.

சமீபத்திய தகவல்களின்படி, சூர்யா உள்ளிட்ட கங்குவா குழு இன்று காலை தாய்லாந்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை அந்நாட்டில் உள்ள கடற்கரை மற்றும் வனப்பகுதிகளில் நாளை தொடங்கவுள்ளனர். இந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட 25 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா தனது பகுதிகளை முழுவதுமாக இந்த அட்டவணையுடன் முடித்துவிட்டு அடுத்ததாக ‘சூர்யா 43’க்க்கான படத்தில் இணைவார் என தெரிவிக்கப்படுகின்றது.

சுதா கொங்கரா இயக்கும் ‘சூர்யா 43’ படத்திற்கான பணிகளை அக்டோபர்/நவம்பர் மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக சூர்யா ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கங்குவாவை 3டி மற்றும் பத்து மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 2024 இல் கங்குவா திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரா, பி.எஸ். அவினாஷ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content