உலகம்

தொலைபேசி எண்ணைத் துண்டிக்க தயாராகும் மஸ்க்!

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் தன்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் அண்மையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

எக்ஸ் தளத்தின் உரிமையாளராகவும் எலான் மஸ்க் உள்ளார். இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இன்னும் சில மாதங்களில் என்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டித்துவிட்டு, எக்ஸ் தளத்தை குறுஞ்செய்தி மற்றும் ஆடியோ, வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தவிருக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த அறிவிப்பு எக்ஸ் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எக்ஸ் தளம் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புக்கான ஆரம்ப பதிப்பை கடந்தாண்டு இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content