இலங்கை செய்தி

காணி பாதுகாப்பு குறித்து வேண்டுகோள் விடுத்த மாதவனை பண்ணையாளர்கள்

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளை வெளியேற்றி தமது மேய்ச்சல்தரை காணிகளை பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து இன்றைய தினம் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

நீண்டகாலமாக விடுத்தகோரிக்கைகளுக்கு அமைவாக இந்த களவிஜயத்தினை மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மேற்கொண்டிருந்தனர்.

இன்றைய தினம் பண்ணையாளர்களை சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அப்பகுதியில் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்டனர்.

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் தற்போதைய காலத்தில் மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதன் காரணமாக நீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் குறித்த பகுதியில் குளம் ஒன்றை அமைத்து நீரை தேக்கிவைக்க நடவடிக்கையெடுக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றபோதிலும் யாரும் அவற்றினை கவனத்தில் கொள்வதில்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நாளொன்றுக்கு 3000லீற்றர் பால் கறக்கப்பட்டுவந்த நிலையில் வறட்சியான காலநிலை காரணமாக தற்போது ஒரு லீற்றர் பாலை கூட பெறமுடியாத நிலையில் விவசாயிகள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சட்ட விரோதமாக தமது மேய்ச்சல்தரை காணிகளை பிடித்துவருபவர்களினால் தொடர்ச்சியாக தாங்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2012ஆம்ஆண்டு முதல் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களின் சுமார் 3000க்கும் அதிகமான மாடுகள் கடத்தப்பட்டு,சுடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் பல்வேறு முறைப்பாடுகளை செய்துள்ளபோதிலும் யாரும் கவனத்தில் கொள்வதில்லையெனவும் பண்ணையாளர் சங்க தலைவர் சு.நிமலன் தெரிவித்தார்.

தமது பகுதிகளில் யானைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காக தமது பண்ணைகளை சூழவுள்ள பற்றைகளை வெட்டும்போது அங்குவரும் வனத்துறை அதிகாரிகள் தங்களை கைதுசெய்யமுற்படுவதுடன் அச்சுறுத்துவதாகவும் ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து காடுகளை வெட்டியும் தீவைத்தும் காணிகளை அபகரிக்கும்போது இந்த வனத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்வதில்லையெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோதிலும் இதுவரையில் நடைமுறைப்படுத்தவில்லையெனவும் இதனால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் நூற்றுக்கணக்கான சட்ட விரோத காணி அபகரிப்பாளர்கள் அப்பகுதியில் காடுகளை அழித்தும்மேய்ச்சல் தரைகளை தீவைத்து அழித்தும் காணி அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை காணமுடிந்தது.

குறிப்பாக மகாவலி அதிகாரசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் முழுமையான உதவியுடன் அங்கு காடுகள் அழிக்கப்பட்டும் மேய்ச்சல்தரைகள் தீயிடப்பட்டும் காணிகள் அபகரிக்கப்படுவதை காணமுடிந்தது.

மேய்ச்சல் தரை நிலங்கள் எரியூட்டப்படுவதனால் தமது கால்நடைகள் உணவினை பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலையுள்ளதாகவும் இங்கு பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பில் மற்றும் அத்துமீறி காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 18 பேர் பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினர் வழிமறித்து சுமார் ஆறு மணிநேரம் தடுத்து வைத்தனர்.

குறித்த பிரதேசத்தில் காணி அபகரிப்பு மற்றும் ஏனைய பிரச்சினை காரணமாக பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பலசமய மத தலைவர்கள் ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் மயிலத்தமடு மாதவனை பிரதேசத்திற்கு வாகனங்களில் இரு வணபிதாக்கல், ஒரு மெனளலி, ஒரு இந்து குருக்கள் 3 ஊடகவியலாள்கள் உட்பட 18 பேர் சென்று பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடிவிட்டு பகல் ஒரு மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு எல்லை பகுதியில் அமைந்துள்ள கம்பி பாலத்தில் அருகாமையில் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்த பல்சமய மத தலைவர்களின் வாகனங்களை அப்பகுதியில் கடமையிலிருந்த மகாவலி அதிகாரசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மறித்துள்ளனர்.

இதன்போது தேரர் ஒருவருடனான நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து வாகனங்களை சூழ்ந்துகொண்டு திறப்புக்களை பிடுங்கி எடுத்து அவர்களை தடுத்து வைத்ததுடன் இந்து குருக்கள் ஒருவரை தாக்க முற்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இச் சம்பவத்தையடுத்து கரடியனாறு மற்றும் அரங்கலாவ பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கொண்ட பொலிஸ் குழுவினர் அந்த பகுதிக்கு சென்று பௌத்த தேரர் உடனான குழுவினருடன் பேச்சில் ஈடுபட்டதுடன் சுமுகநிலைமையேற்படுத்தப்பட்டதுடன் பல்சமய பிரதிநிதிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஊடகவியலாளர்களிடம் வெள்ளைப் பேப்பரில் கடிதம் எழுதச் சொல்லி அச்சுத்திய இனவாதிகள்!
ஊடகவியலாளர்களை சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களிடம் இருந்த புகைப்பட கருவிகள், தொலைபேசிகளை பறிப்பதற்கு முயற்சி செய்ததோடு ஊடகவியலாளர்களிடம் வெள்ளைப் பேப்பரில் கடிதங்கள் எழுதி கையெழுத்து வேண்டியும் எடுத்தனர்.

ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்கள் காணொளிகளை எங்கும் பிரசுரிக்க கூடாது என்று கூறி கடிதம் எழுதி கையெழுத்தும் வைக்க சொல்லி அச்சுறுத்திய சம்பவம் இலங்கையில் ஊடாக சுதந்திரம் என்பது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறது.

(Visited 10 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content