பொழுதுபோக்கு

LCU-வில் இணையும் மாஸ் மாஸ்டர் ஹீரோ… அடுத்த சம்பவம் ரெடி…

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் என்ற உச்சத்தை பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இவர், தற்போது சூப்பர்ஸ்டார் வைத்து கூலி படம் எடுக்கின்றார்.

ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தின் வீடியோ இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்கு கோரிக்கையும் விடுத்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் (LCU) இதன் கீழ் கைதி, விக்ரம் மற்றும் லியோ படங்களை இணைத்தார் லோகேஷ். இந்த நிலையில், கூலி படத்திற்கு பிறகு, மீண்டும் LCU கதைக்களத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கார்த்தி, கமல், சூர்யா வரிசையில் LCUவில் இணையப்போகும் அடுத்த பிரபல ஹீரோ யார் தெரியுமா? காஞ்சனா படத்தை சீரிஸ் போல எடுக்க, அதில் தொடர்ந்து சலிக்காமல் நடிக்கும் நம் ராகவா லாரன்ஸ் தான்.

ஆம், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் ‘பென்ஸ்’ (BENZ).

இந்த படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையதாம். ஆகையால் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் LCUவில் தான் இணையவுள்ளதாக கூறப்படுகிறது

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content