பொழுதுபோக்கு

‘அனிமல்’இயக்குநரின் படத்தில் இணையவுள்ள கீர்த்தி சுரேஷ்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘அனிமல்’ பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா படக்கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘அர்ஜூன் ரெட்டி’, ‘அனிமல்’ படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா நடிகர் பிரபாஸூடன் இணைந்து ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் கதாநாயகி யார் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் ஆகியோருடன் மூன்றாவது கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Adipurush: Is Keerthy Suresh The Leading Lady In This Prabhas Starrer? | 🎥  LatestLY

‘அனிமல்’, ‘அர்ஜூன் ரெட்டி’ படங்களில் ஆணாதிக்கம், பெண்கள் கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றிற்காக பல சர்ச்சைகளை சந்தித்தார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. அவரது இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகி என்றால், அதே போன்ற டாக்சிக் கதாபாத்திரத்தை அவருக்கும் கொடுப்பாரா இயக்குநர் சந்தீப் என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சந்தீப் ரெட்டி வங்கா இப்போது ‘அனிமல்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருப்பதால் ‘ஸ்பிரிட்’ படத்தின் பணிகள் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷூம் தமிழில் ‘ரகுதத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கன்னிவெடி’ மற்றும் பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content