பொழுதுபோக்கு

ஜவான் படம் எப்படி இருக்கு? அட்லீ நீ ஜெய்ச்சிட்டடா… ஜெயிச்சிட்ட

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என இதுவரை அட்லீ இயக்கிய 4 தமிழ் படங்களும் மெகா ஹிட் அடித்துள்ள நிலையில், முதன்முறையாக ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் அட்லீ இயக்கி உள்ள ஜவான் படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

ஆக்‌ஷன், மாஸ், மிரட்டல், நடிப்பு, எமோஷன் என அனைத்தையும் ஷாருக்கானுக்காகவும் ரசிகர்களுக்காகவும் அட்லீ எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் என ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் ஷாருக்கான் சுமார் 4 ஆண்டுகள் சினிமாவுக்கே ஓய்வு கொடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்ய ஆரம்பித்தார். அதன் விளைவாக இந்த ஆண்டு வெளியான பதான் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் வெற்றியை கொடுத்தது.

இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் வெளியாகி உள்ள ஜவான் திரைப்படம் 4 ஸ்டார் ரேட்டிங் என்றும் பிளாக்பஸ்டர் என்றும் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

பட்டாசை எல்லாம் கடந்து தற்போது ஜவான் படத்தின் ரிலீஸை முன்னிட்டு மேள தாளங்களுடன் கலர் பவுடரை எல்லாம் கொட்டி தியேட்டரையே ஹோலி கொண்டாட்டம் நடைபெறும் இடமாக மாற்றி ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி வருகின்றனர். இன்னும் சில வாரங்களுக்கு தியேட்டர்களில் தீபாவளி கொண்டாட்டம் காணப்படும் என ஷாருக்கான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

(Visited 9 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content