இந்தியா உடைந்து நொறுங்கிய தருணம்… கட்டியணைக்கும் உறவுகள்! கொண்டாடும் AUS… புகைப்படத் தொகுப்பு
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி அடைந்த தோல்வியடைந்த நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி மைதானத்தில் கண்ணீருடன் கலங்கி நின்று தொப்பியால் முகத்தை மூடிய காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 240 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது.
வெற்றிக்கு பின் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடிய நிலையில், இந்திய அணி வீரர்கள் மைதானத்திலேயே கலங்கி போயினர்.
ஒரு பக்கம் சிராஜ் கண்ணீர் விட்டு அழுத நிலையில், அவருக்கு பும்ரா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஆறுதல் கூறி ஓய்வறைக்கு அழைத்து சென்றனர்.
அதன்பின் ரோகித் சர்மா சோகத்துடன் வெற்றிபெற்ற அணிக்கு வாழ்த்து கூறிவிட்டு, கண்ணீருடன் ஓய்வறை நோக்கி ஓடினார்.
அதேபோல் இந்திய அணியின் விராட் கோலியும் மைதானத்தில் கண் கலங்கினார். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை தலைவனாக பறிகொடுத்த விராட் கோலி இம்முறை தளபதியாக பறி கொடுத்துள்ளார்.
மைதானத்திலேயே விராட் கோலி கண்ணீர்விட்ட நிலையில், யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக தொப்பியை வைத்து முகத்தை மறைத்து கொண்டு ஓய்வறை திரும்பினார். இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் கேப்டன் ரோகித் சர்மா, சிராஜ் உள்ளிட்டோர் மைதானத்திலேயே கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் மைதானத்திலேயே கீழே முட்டிப்போட்டு அமர்ந்து கண்ணீர் விட்டார். இது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்றதை போல் மீண்டும் இந்திய அணி இம்முறை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் வெற்றியை தட்டி பறித்தது ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி முடிந்த உடன் நடந்த நிகழ்ச்சியிலும் இந்திய வீரர்கள் கண்ணீரை அடக்கிக் கொண்டு நின்றனர். அப்போது ஆட்ட நாயகன் விருது வழங்க வந்த சச்சின் டெண்டுல்கர், இந்திய வீரர்களை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். எந்த வீரரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தோல்வி கொடுத்த வலியில் வார்த்தை வராமல் நின்று கொண்டு இருந்தனர். சச்சின் அவர்களை தட்டிக் கொடுத்து, கட்டி அணைத்து தேற்றினார்.
ஆறு முறை உலகக்கோப்பை தொடரில் ஆடி அதில் ஐந்து முறை இதே போன்ற வலியை அனுபவித்தவர் சச்சின் டெண்டுல்கர். குறிப்பாக 2003 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இதே ஆஸ்திரேலிய அணியிடம் தான் கங்குலி தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது.
தற்போது விராட் கோலி உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றது போலவே, அப்போது சச்சின் டெண்டுல்கர் தொடர்நாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.