உலகம் செய்தி

புதிய காதலனுடனான திருமணத்திற்கு பழைய காதலனிடம் அனுமதி பெறச் சென்ற யுவதி

23 வயதான யுவதியொருவர் தனது புதிய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக தனது பழைய காதலனிடம் அனுமதி பெறச் சென்று 03 நாட்களைக் கழித்ததாக புலத்சிங்கள பகுதியில் நடந்துள்ளது.

இந்த யுவதியின் தாயார் தனது மகள் காணாமல் போயுள்ளதாக நேற்று புலத்சிங்கள பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்தத் தகவல் அனைத்தும் தெரியவந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

புலத்சிங்களவை வசிப்பிடமாகக் கொண்ட இந்த யுவதி, புலத்சிங்களவில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் சில காலமாக உறவுகொண்டுள்ளார்.

சிறிது காலத்தின் பின்னர் அந்த உறவை இழந்து வேறு பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞனுடன் இளம்பெண் உறவை ஏற்படுத்திக் கொண்டதுடன் இரு தரப்பினரின் சம்தத்தையும் பெற்று திருமணம் செய்துகொள்ள தயாராகியுள்ளார்.

மகள் காணாமல் போனது குறித்து தாயார் புலத்சிங்கள பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும், மூன்று நாட்களுக்கு பின்னர் யுவதி வீடு திரும்பியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாயின் முறைப்பாட்டின் பிரகாரம், புலத்சிங்கள பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரின் விசாரணைகளின் போது யுவதி பொலிஸாரிடம் அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதன்போது பழைய காதலனையும் புதிய காதலனையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து நீண்ட விசாரணையின் பின்னர் புதிய காதலன் யுவதியை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததையடுத்து சம்பவம் சமரசம் ஆனதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(Visited 18 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content