இலங்கை

கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் – இலங்கை அரசியல்வாதியின் சர்ச்சை கருத்து

கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் என்று பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில், மூவின மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள். இதனால் தெற்கிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வடக்கு – கிழக்கில் விகாரைகளை நிறுவுதல் பௌத்த மயமாக்கல் எனில் தெற்கில் – கொழும்பில் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டமை இந்து மயமாக்கலா?

வடக்கு – கிழக்கில் சிங்களவர்கள் குடியேறுதல் சிங்கள மயமாக்கல் எனில் தெற்கில் – கொழும்பில் தமிழர்கள் குடியமர்ந்துள்ளமை தமிழர் மயமாக்கலா? தமிழ் அரசியல்வாதிகள் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 11 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content