பொழுதுபோக்கு

நயன்தாரா கேட்ட சம்பளத்தை கேட்டு தலை சுற்றிப்போன தயாரிப்பாளர்

  • April 29, 2025
  • 0 Comments

நடிகை நயன்தாரா இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக டெஸ்ட் திரைப்படம் வெளிவந்தது. நேரடியாக ஓடிடியில் வெளிவந்த இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. படுதோல்வியை சந்தித்தது. நயன்தாரா கைவசம் தற்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, MMMN, மூக்குத்தி அம்மன் 2, Hi என பல திரைப்படங்கள் உள்ளன. இந்த நிலையில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில்அனில் ரவிபுடி இயக்கத்தில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்கலாம் […]

பொழுதுபோக்கு

KGF – 3இல் நம்ம அஜித்… தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தப்போகும் AK

  • April 29, 2025
  • 0 Comments

இந்த வருட தொடக்கம் அஜித்துக்கு தோல்வியை கொடுத்தாலும் அதன் பிறகு தொடர்ந்து வெற்றி முகத்தை தான் பார்த்து வருகிறார். அவ்வாறு விடாமுயற்சி தோல்விக்கு பிறகு குட் பேட் அக்லி படம் வெளியானது. இப்படம் வசூல் வேட்டையாடியது. அதன் பிறகு கார் ரேசில் கலந்து கொண்ட அஜித்துக்கு அடுத்தடுத்து வெற்றி கொடுத்தது. அதோடு நேற்றைய தினம் பத்ம பூஷன் விருதையும் பெற்றிருந்தார். இதில் கேஜிஎஃப் பட இயக்குனருடன் அஜித் கூட்டணி போட இருக்கிறார். கே. ஜி. எஃப், சலார் […]

ஆசியா

பாகிஸ்தானில் எண்ணெய் கசிவால் நிகழ்ந்த விபரீதம் – ஆபத்தில் உள்ள பலர்!

  • April 29, 2025
  • 0 Comments

தென்மேற்கு பாகிஸ்தானில் எண்ணெய் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 56 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலூசிஸ்தான் மாகாணத்தின் நௌஷ்கி மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பலூசிஸ்தான் முதலமைச்சர் சர்ஃப்ராஸ் புக்டி மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் உள்ள சிவில் மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

ஐரோப்பா

ஸ்பெனியில் வழமைக்கு திரும்பிய மின்வெட்டு : ஒன்றுக்கூடும் பாதுகாப்பு கவுன்சில்!

  • April 29, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது 100 சதவீதம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பரபரப்பான இரவு”க்குப் பிறகு, 99.95% “எரிசக்தி தேவை” பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். 100% “போக்குவரத்து நெட்வொர்க் துணை மின்நிலையங்கள்” மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார். “தற்போதைய சூழ்நிலையை பகுப்பாய்வு செய்ய” நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இன்று காலை கூடுகிறது என்றும்  சான்செஸ் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கையில் நண்பகலுடன் வானிலையில் ஏற்படும் மாற்றம் – மக்களின் கவனத்திற்கு!

  • April 29, 2025
  • 0 Comments

இலங்கையில் பலத்த மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (29) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்றிரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் பெய்யும் வாய்ப்பு அதிகம். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தப் […]

வட அமெரிக்கா

கனடாவில் வெளிவந்த தேர்தல் முடிவுகள் – மீண்டும் ஆட்சியமைக்கும் லிபரல் கட்சி

  • April 29, 2025
  • 0 Comments

கனடாவில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. புதிய பிரதமரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. லிபரல் கட்சி மொத்தமாக 144 இடங்களை வென்றுள்ளதுடன், 21 இடங்களில் முன்னிலையில் உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக லிபரல் கட்சி கனடாவில் ஆட்சியமைக்க உள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி இதுவரை 121 இடங்களை வென்றுள்ளதுடன், 26 இடங்களில் […]

வட அமெரிக்கா

உக்ரைன் போரை நிறுத்த நிரந்தர போர்நிறுத்தம் கோரும் டிரம்ப்

  • April 29, 2025
  • 0 Comments

உக்ரைன் போரை நிறுத்த நிரந்தர போர்நிறுத்தமே தீர்வு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். உக்ரைன் – ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர நிரந்தர போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருவரின் செயல்பாடுகள் மீது டிரம்ப் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார். […]

இலங்கை

இலங்கையில் கோர விபத்து – 30 பேர் காயம்

  • April 29, 2025
  • 0 Comments

பெலியத்த ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பெலியத்த நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், பெலியத்தவிலிருந்து டிக்வெல்ல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை மருத்துவமனையிலும் பெலியத்த ஹத்போதிய மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் மீது மோதிய வாகனம் – 4 பிள்ளைகள் பலி

  • April 29, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் உள்ள கட்டடத்தின்மீது வாகனம் மோதியதில் 4 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 4 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்டவர்களாகும். சம்பவம் நடந்தபோது அவர்களில் மூவர் கட்டடத்திற்கு வெளியேயும் இன்னொருவர் உள்ளேயும் இருந்தனர். அமெரிக்காவின் இலனோய் மாநிலத்தின் சாதாம் என்ற சிறிய ஊரில் அந்தச் சம்பவம் நடந்தது. காயமுற்ற சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அம்மாநிலக் காவல்துறை கூறியது. வாகனத்தின் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் இல்லை. அவர் சோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். சம்பவம் மிகுந்த […]

வாழ்வியல்

இதய ஆரோக்கியத்திற்கு உதவும் 5 இரவு நேர வழக்க மாற்றங்கள்!

  • April 29, 2025
  • 0 Comments

இதய ஆரோக்கியத்தைப் பாதிப்பதில் பகல் நேரச் செயல்பாடுகளைப் போலவே, இரவு நேரப் பழக்கவழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் இரவில் மேற்கொள்ளும் சில எளிய மாற்றங்கள், நீண்ட கால நோக்கில் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க உதவும். பெரும்பாலும் கவனிக்கப்படாத இந்த இரவு நேரப் பழக்கங்கள், நமது ஒட்டுமொத்த நலனையும், குறிப்பாக இதயத்தின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன. இந்தப் பதிவில் இதயத்தைப் பாதுகாக்கும் 5 முக்கிய இரவு நேர மாற்றங்கள் என்னென்ன என்று பார்ப்போம். 1. […]

Skip to content