மத்திய கிழக்கு

24 வார சம்பளம் போனஸ்; மகிழ்ச்சியில் உச்சத்தில் எமிரேட்ஸ் ஊழியர்கள்

  • May 13, 2023
  • 0 Comments

கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் 24 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துபாயை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த நிதியாண்டில் நான்கரை கோடி பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு அந்நிறுவனம் 29 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளது. எனவே வரலாறு காணாத உச்சத்தை கொண்டாடும் விதமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஐந்தரை மாத சம்பளத்தை எமிரேட்ஸ் […]

இலங்கை

கம்பளையில் கொலைசெய்யப்பட்ட 22 வயதான யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!

  • May 13, 2023
  • 0 Comments

கம்பளையில் காணாமல்போன  22 வயதாக யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பாத்திமா முனவ்வரா என்ற யுவதி காணாமல்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,   குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அத்துடன்  இது தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அளித்த  வாக்குமூலத்தில் குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் அடையாளம் காட்டிய இடத்தில் கம்பளை நீதவான் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

பிரான்ஸின் 19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • May 13, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாவனை தொடர்பான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி காரணமாக பிரான்ஸின் இந்த பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. l’Aude, l’Hérault, Gard, Bouches-du-Rhône, Var Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Vaucluse, Drôme l’Ardèche, l’Ain, Haute-Saône, Loiret, Seine-et-Marne, Yvelines, l’Oise, Vienne, Deux-Sèvres. ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விளையாட்டு திடல்கள், வாகனங்கள் கழுவும் இடம் மற்றும் நீச்சல் […]

பொழுதுபோக்கு

படப்பிடிப்பின் போது மரணத்தின் எல்லைக்கு சென்று திரும்பிய பிரபல நடிகையும், நடிகரும்…

  • May 13, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்தார். இந்த படத்தில் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு மலேசியாவில் நடந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் அதில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அப்போது தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நடிகை காவ்யா தாப்பர் மலேசியாவில் நடந்த பிச்கைக்காரன் -2 படப்பிடிப்பில் படுகாயம் அடைந்ததாக கூறியுள்ளார். அப்போது நடந்த திகில் அனுபவத்தை […]

இலங்கை

வவுனியாவில் அதிர்ச்சி – முன்னாள் காதலியை கொலை செய்துவிட்டு இளைஞன் எடுத்த முடிவு

  • May 13, 2023
  • 0 Comments

வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண் ஒருவர் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பின்னர் சந்தேக நபரும் இன்று காலை நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேகநபர் […]

இலங்கை

இலங்கை பஸ் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

  • May 13, 2023
  • 0 Comments

இலங்கை பஸ் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, 1955 என்ற இலக்கதிற்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது பணம் செலுத்திய பின் டிக்கெட் வழங்காமை, மிகுதி பணம் வழங்காமை, தொந்தரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக இந்த இலக்கம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வாழ்வியல்

முகத்தில் பருக்களை ஏற்படுத்தும் சாக்லேட், கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகள்

  • May 13, 2023
  • 0 Comments

எந்த வகை உணவுப் பொருளும் முகத்தில் பருக்களை உண்டாக்குவதாக அறிவியல் ரீதியான சான்றுகள் இல்லை என கூறப்படுகின்றது. எனினும் முகப் பருக்களுக்கான சில காரணங்கள்: – மரபியல் – உடலில் நிகழும் வேதியல் மாற்றங்கள் – முகத்தின் எண்ணெய்ச் சுரப்பிகள் – கிருமி எனினும், சில உணவு வகைகளை உட்கொண்டால், பருக்கள் மோசமடையலாம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறுகிறார் KK மகளிர், குழந்தை மருத்துவமனையில் பணிபுரியும் தோல் மருத்துவர் உமா அழகப்பன். குறிப்பாக, high glycaemic index […]

பொழுதுபோக்கு

இதுவரை செய்யாத ஒன்றை லியோ படத்தில் செய்த விஜய்! மிரண்டு போன லோகேஷ்

  • May 13, 2023
  • 0 Comments

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் படங்களை பொறுத்த வரைக்கும் எப்போதுமே காதல் காட்சிகள் மற்றும், அறிமுக பாடல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் லியோ படத்தில் பிரம்மாண்டமாக ஒரு பாடல் காட்சியை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த பாடலுக்கு […]

பொழுதுபோக்கு

சமந்தாவிற்கு தெரியாமல் விஜய் தேவரகொண்டா எடுத்த வீடியோ வெளியானது…

  • May 13, 2023
  • 0 Comments

சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் ‘குஷி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான ‘என் ரோஜா நீயே’ பாடல் சமீபத்தில் […]

அறிந்திருக்க வேண்டியவை

நிலவின் மிகத் தெளிவான புகைப்படம் வெளியானது!

  • May 13, 2023
  • 0 Comments

நிலவின் மிகத் தெளிவான புகைப்படத்தை ஆண்ட்ரூ மெக்கார்த்தி என்ற வானியற்பியலாளர் பகிர்ந்துள்ளார். பூமியில் இருந்து வானத்தை பார்க்கும்பொழுது நட்சத்திரங்கள், நிலா என மிகவும் அற்புதமாக இருக்கும். அதனை எப்பொழுது நாம் அருகில் சென்று பாப்போம் என்ற ஏக்கமும் வரும். இன்னும் சிலருக்கு அதனை புகைப்படம் எடுக்கும் ஆசையும் இருக்கும். அதேபோல, ஆண்ட்ரூ மெக்கார்த்தி என்ற வானியற்பியலாளர் ஒருவர் நிலவின் மிகத் தெளிவான புகைப்படத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் நிலவின் முழு அளவிலான புகைப்படத்தை உருவாக்க […]