ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் – சிக்கலில் மக்கள்
ஜெர்மனிய நாட்டில் தற்பொழுது மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கின்றது. ஜெர்மனியில் மருந்தகங்களுக்கு பொறுப்பான அமைப்பானது மருந்துகளுக்கு தற்போது பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக 400 மருந்துகள் இவ்வாறு மிகவும் குறைவாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வைத்தியசாலைகள் பல சிக்கலை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிய வந்திருக்கின்றது. பல நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான தகுந்த மருந்துகளை உரிய நேரத்தில் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் […]