தமிழ்நாடு

தமிழகத்தில் 6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்!

  • May 14, 2023
  • 0 Comments

தமிழகத்தில் 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே, சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான். இவருடைய மகன் மணிகண்டன் என்பவர் மேட்டுபாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார்.நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க துவங்கியுள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி இவர்களுக்கு […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

  • May 14, 2023
  • 0 Comments

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட திணைக்களம், அண்மைக்காலமாக பெய்துவரும் கடும் மழை காரணமாக நில்வல ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனால், கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்படை, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட நிலாவல ஆற்றின் பல தாழ்நிலப் பிரதேசங்களில் பாரிய வெள்ள நிலைமை ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]

ஆசியா

பாகிஸ்தானில் வழமைக்கு திரும்பிய இணைய சேவை : இருப்பினும் சில தளங்களுக்கு தடை நீடிப்பு!

  • May 14, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் பாகிஸ்தானில் அமைதி இன்மையை ஏற்படுத்தியது. இந்தால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் ருவிட்டர் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் பேஸ்புக்,  டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் […]

பொழுதுபோக்கு

8 மாதம் காதல்.. பிரமாண்ட கல்யாணம்.. 15 நாட்களில் பிரிவு!! பிரபல தொலைக்காட்சி ஜோடியின் பரிதாபம்

  • May 14, 2023
  • 0 Comments

திருமணம் ஆன 15 நாட்களில் விஜய் டிவி காதல் ஜோடி பிரிந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விஜய் டிவியில் சமீபத்தில் நிறைவடைந்த சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்த நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து மார்ச் மாதத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் ஜோடி திருமணம் முடிந்து 15 நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். சம்யுக்தாவின் அப்பா தான் தங்களது பிரிவுக்கு காரணம் […]

ஐரோப்பா

ஸ்கொட்லாந்தில் முதல் தானியங்கி பேருந்து சேவை ஆரம்பம்!

  • May 14, 2023
  • 0 Comments

உலகிலேயே முதல்முறையாக பிரிட்டனின் முதல் தானியங்கி பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து ஸ்காட்லாந்தின் ஃபோர்த் ரோடு பாலத்தின் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தின் சோதனை முயற்சியாக இன்வெர்கீதிங் ஃபைஃப் மற்றும் எடின்பர்க் பூங்காவிற்கு அருகிலுள்ள பெர்ரி டால் வரை பேருந்து சேவை இயக்கப்பட்டது. ஸ்காட்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் கெவின் ஸ்டீவர்ட் இந்த பேருந்தில் முதல் பயணியாக பயணம் செய்தார். மேலும் 2025ம் ஆண்டு வரை சோதனை அடிப்படையில் ஓட்டுனர் […]

ஐரோப்பா

50 ஆயிரத்திற்கும் அதிகமான படிகங்களுடன் உலக சாதனை படைத்த திருமண ஆடை!

  • May 14, 2023
  • 0 Comments

மிலினில் நடைபெற்ற பேஷன் ஷோவில், 50000க்கும் அதிகமான படிகங்களுடன் தயாரிக்கப்பட்ட, திருமண ஆடை உலக சாதனை படைத்துள்ளது. மிலனில் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில், 50,890 ஸ்வரோவஸ்கி படிகங்கள் கொண்ட ஆடை அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த ஆடை இத்தாலியில் பிரபல திருமண ஆடை தயாரிக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக அதன் மேல்சட்டையில் ஆயிரக்கணக்கான படிகங்கள் தைக்கப்பட்டுள்ளன. இதை தைப்பதற்காக மட்டும் 200 மணி நேரம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு […]

ஆசியா

கரையை கடக்கும் மோக்கா புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

  • May 14, 2023
  • 0 Comments

தென்கிழக்கு மற்றும் அதைஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று முன்தினம் இரவு அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது. மோக்கா புயல் இன்று தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மற்றும் மியான்மரில் உள்ள தியாக்பியூ இடையே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது 180 முதல் 190 கிலோ […]

இலங்கை

சீனாவின் அரசியல் செல்வாக்கினால் பாதிப்புக்குள்ளாகும் இலங்கை!

  • May 14, 2023
  • 0 Comments

சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கினால் இலங்கையில் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது என அந்த நாட்டின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் பிரிட்டனின் வெளியுறவு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் அன்ரூ மிட்செல் பொதுச்சபையில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். எனது நண்பர் குறிப்பிட்ட கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் உக்ரைன் மீதான ரஸ்ய படையெடுப்பின் தாக்கம் ஆகிய அனைத்தும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளன. நீண்டகாலமாக நிதியை தவறான முகாமை செய்தமை உட்பட […]

செய்தி தமிழ்நாடு

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

  • May 14, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை அய்யனார் கோவிலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை ஸ்ரீ அய்யனார் கோவில் விழாவையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தனர். இதில் புதுக்கோட்டை சிவகங்கை திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 800 காளைகள் பங்கேற்றுள்ளன 300 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்குவதற்கு தயாராக இருக்கின்றனர். வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் […]

இலங்கை

20000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாரா, களுத்துறையில் உயிரிழந்த மாணவி?

  • May 14, 2023
  • 0 Comments

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை பிரதான சந்தேகநபருக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் 16 வயதுடைய பாடசாலை மாணவியை 20000க்கு விற்பனை செய்யுமாறு தனது தோழியுடன் விடுதியில் இருந்த இளைஞன் (22) யோசனை கூறியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸாரின் சந்தேகத்தின்படி பிரதான சந்தேக நபரிடம் குறித்த மாணவியை விற்பனை செய்தமைக்காக 22 வயதுடைய இளைஞன் இந்தத் தொகையில் ஒரு பகுதியைப் பெற்றுள்ளார். மே 06 […]