ஆசியா

14நாட்களில் 42 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாடு!

  • May 8, 2023
  • 0 Comments

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று மனித உரிமைகள் குழு ஒன்று கூறியுள்ளது. ஈரான் நாட்டில் கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தூக்கிலிடப்படுகின்றனர். அதனால் ஈரான் அரசு நிர்வாகத்தை மனித உரிமை அமைப்புகள் கண்டித்து வருகின்றன. அந்நாட்டில் செயல்படும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரான் அரசு இந்தாண்டில் மட்டும் இதுவரை 194 பேரை தூக்கிலிட்டு கொன்றுள்ளது.கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர். இவர்களில் பாதி பேர் […]

பொழுதுபோக்கு

பெண்கள் உடலை மறைக்க வேண்டும் – சல்மான் கான் பரபரப்பு கருத்து!

  • May 8, 2023
  • 0 Comments

சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் நீண்ட காலதாமதத்துக்குப் பின்னர் வெளியான ராதே திரைப்படம். இந்த திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்திருந்தது.  இந்நிலையில் சல்மான் கான் அடுத்ததாக தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு கிஸி க பாய் கிஸி கி ஜான் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களையும் சராசரியான வசூலையும் பெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களுக்கு இருக்கும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கனமழை : வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

  • May 8, 2023
  • 0 Comments

தென்மேற்கு ஜேர்மனியில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் அடித்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தென்மேற்கு ஜேர்மனியில்,  Baden-Wuerttemberg மாநிலத்தில் உள்ள Zollernalbkreis கவுண்டியில், கடும் மழையுடனான வானிலை நிலவியது. இதன்காரணமாக பெருபாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சிறிய நிலச்சரிவுகள் போக்குவரத்து நிலைமைகளை முற்றிலும் பாதித்துள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் மீட்பு பணியாளர்கள் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பா

ஸ்பெயினில் அதி வெப்பமான காலநிலை ஏப்ரலில் பதிவு!

  • May 8, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் கடந்த ஏப்ரல் மாதம்  மிகவும் வரண்ட வெப்பமான வானிலை பதிவாகியதாக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 1961 இல் இருந்து இதுவரையான காலப்பகுதியில் கடந்த ஏப்ரல் மாதமே அதிகளவிலான வறண்ட காலநிலை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஸ்பெயினின் AEMET எனப்படும் மாநில வானிலை ஆய்வு நிறுவனம், வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரி வெப்பநிலை, 14.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த காலங்களை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். அதேநேரம்  […]

இந்தியா முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் மரணம்

  • May 8, 2023
  • 0 Comments

டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், சனிக்கிழமை இரவு, பொது மக்களை நோக்கி, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் பலியானார். இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகினர், மேலும் 7 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு குழந்தை உட்பட ஏழு […]

ஆசியா

12 ஆண்டுகளில் முதல் முறையாக தென்கொரியா செல்லும் ஜப்பான் பிரதமர்!

  • May 8, 2023
  • 0 Comments

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் சமீப காலமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில்,  ஜப்பான் கடற்பகுதியிலும் அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வடகொரியா பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வடகொரியாவை சமாளிப்பதற்காக தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்தின. இதனையடுத்து,  ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். அங்கு அதிபர் யூன் சுக் இயோலை சந்தித்து இரு தரப்பு உறவுகளை […]

செய்தி தென் அமெரிக்கா

பெருவின் தங்க சுரங்கத்தில் தீ விபத்து : 27 தொழிலாளர்கள் பலி!

  • May 8, 2023
  • 0 Comments

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில்  தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்கா நாடான பெரு லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் சுமார் 300 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் வேலை பாரத்து வருகின்றனர். இதன்போது குறித்த சுரங்கத்தில் எதிர்பாராத விதமாக தீ பரவியது. இந்நிலையில், சுரங்கத்தில் இருந்து வெளியேற முடியாத தொழிலர்கள் 27 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். குறைந்த மின் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் காட்டுத்தீயில் சிக்கிய நால்வருக்கு நேர்ந்த சோகம்!

  • May 8, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் உரால் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கூர்கானில் பரவிய காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. இந்நிலையில் வெர்த்லோவ் பகுதியில் 54 ஆயிரம் பரப்பளவில் அரியவகை மரங்கள், செடி, கொடிகள் தீக்கிரையாகின. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் 4 ஆயிரத்து 800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெர்த்லோவ் பகுதியில் துப்பாக்கி வெடிமருந்து குடோனில் பற்றிய தீ, உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அருகில் வசித்தவர்கள் […]

ஐரோப்பா

ஈரானின் 35 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

  • May 8, 2023
  • 0 Comments

உக்ரைனில் இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஐந்துபேர் காயமைடைந்துள்ளதுடன், இரண்டு அடுக்குமாடி கட்டிடம் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,  நகரின் வான் பாதுகாப்பு பகுதியில் ஈரானில் தயாரிக்கப்பட்ட 35 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நகர மேயர்,  “எல்லாம் எப்போது முடிவடையும்? மிக மோசமான விஷயம் என்னவென்றால், நாங்கள் ஏற்கனவே அதனுடன் வாழ கற்றுக்கொண்டோம் எனத் தெரிவித்துள்ளார். “ஒலிகள் பயங்கரமாக இருந்தன, முழு நேரத்திலும் நான் அப்படி ஒரு விஷயத்தை கேட்டதில்லை […]

வட அமெரிக்கா

மணலில் பள்ளம் தோண்டி விளையாடிய இளைஞன் உயிருடன் புதைந்த பரிதாபம்!

  • May 8, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் மணல் மேட்டில் பள்ளம் தோண்டி விளையாடிய இளைஞர் ஒருவர் உயிருடன் புதைந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள கடற்கரை மணல் மேட்டில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வர்ஜீனியாவை சேர்ந்த 17 வயது பெயர் குறிப்பிடப்படாத இளைஞரே, பள்ளத்தில் உயிருடன் புதைந்து மரணமடைந்தவர். மே 7ம் திகதி மதியம் சுமார் 2 மணியளவில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து இளைஞரை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு, […]

Skip to content