பெருவின் தங்க சுரங்கத்தில் தீ விபத்து : 27 தொழிலாளர்கள் பலி!
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்கா நாடான பெரு லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் சுமார் 300 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் வேலை பாரத்து வருகின்றனர்.
இதன்போது குறித்த சுரங்கத்தில் எதிர்பாராத விதமாக தீ பரவியது. இந்நிலையில், சுரங்கத்தில் இருந்து வெளியேற முடியாத தொழிலர்கள் 27 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
குறைந்த மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. பெரு நாட்டு வரலாற்றில் மிக மோசமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)