சீன ராஜதந்திரியை நாடு கடத்தவுள்ள கனடா – எதிர்பு தெரிவித்துள்ள சீனா
கனடாவிற்கான சீனத் தூதரகத்தில் பணியாற்றி வரும் ஸாவொ வெய் என்ற சீன ராஜதந்திரியே நாடு கடத்தப்பட உள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் சொங் மற்றும் அவரது குடும்பம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மீது சீனா அரசியல் தலையீடுகளை செய்யும் முனைப்புக்களில் இந்த ராஜதந்திரி செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்டின் சட்டங்களுக்கு ஸாவோ வெய், பொருத்தமற்றவர் என வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோன் தெரிவித்துள்ளார்.நாட்டு மக்களின் பாதுகாப்பும் மக்களின் சுபீட்சமும் மிகவும் முக்கியமானது […]