இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை – பந்துல குணவர்தன!

  • May 9, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை  அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (09) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்படி கூறினார். கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் தவறான செய்திகள் வெளியாவதாக மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மூலப்பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்து,  உள்நாட்டில் கோதுமை மா உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்கள் […]

இலங்கை

மே 9 கலவரத்தின் போது எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை – கெமுனு விஜேரத்ன!

  • May 9, 2023
  • 0 Comments

கடந்த வருடம் மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அன்றை சம்பவத்தில் 32 பேருந்துகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,  ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். நட்டஈடு வழங்கப்படாமையால் பஸ் […]

இலங்கை

இலங்கைக்கான கடனை ஒரு வருடத்திற்கு நீடித்த இந்தியா!

  • May 9, 2023
  • 0 Comments

இலங்கைக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்ட கடன் வசதியை நீடிக்க இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தநிலையில்  தற்போது இந்தியா குறித்த கடன் வசதியை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் வரை  ஒரு வருடத்தினால் நீடித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

”ஜவான்“ லேட்டஸ்ட் அப்டேட்! தமிழில் பாடியுள்ள ஷாருக்கான்??

  • May 9, 2023
  • 0 Comments

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான். ஷாருக்கான் நடித்து திரைக்கு வந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பதான் படத்தை அடுத்து வெளியாகும் படம் என்பதால் இந்த ஜவான் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 7ஆம் திகதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா குறித்து ஷாருக்கான் கூறுகையில், நயன்தாரா மிகவும் அழகானவர் இனிமையானவர். அவருடன் பணியாற்றியது சவுகரியமாக இருந்தது. அதேபோல் விஜய் சேதுபதி அடக்கமான […]

செய்தி தமிழ்நாடு

50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

  • May 9, 2023
  • 0 Comments

மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. மதுரையை தலைமையிடமாகக் கொண்ட வடமலையான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மதுரை செக்கிகுளம் தெற்கு மாரட் வீதி பகுதியிலும் வடமலையான் மருத்துவமனை மற்றும் அதன் அலுவலகங்களிலும் அதேபோல். மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான மருந்தகங்கள். அலுவலகங்கள் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் முறையாக […]

இந்தியா

தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுக்க ஆசைப்பட்டு பலியான சிறுவன் (வீடியோ)

  • May 9, 2023
  • 0 Comments

தெலுங்கானாவில் தண்டவாளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க சென்ற சிறுவன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சர்பாராஸ் என்ற 16 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் மீது மோகம் கொண்டுள்ளார்.சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவிட்டு வெளியிட்டு அதில் பிரபலம் அடைவதை விரும்பிய சர்பாராஸ், ரீல்ஸ் எடுக்க முயன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த புதன் கிழமையன்று மதிய வேளையில் தன் பெற்றோரிடம் தொழுகைக்கு செல்கிறேன் என கூறி விட்டு நண்பர்களுடன் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியுள்ள 92 ஆயிரம் இலங்கையர்கள்!

  • May 9, 2023
  • 0 Comments

இலங்கியில் நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக தமிழகத்தில் சுமார் 92 ஆயிரம் இலங்கையர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், 92435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்குள்ளோ அல்லது வெளியேயோ தங்கியுள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதி முகாம்கள் இயங்கி வருவதாகவும் அதில், 19046 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 435 பேர் தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். […]

பொழுதுபோக்கு

தமிழ் மக்களுக்கு பிடித்த பாலிவுட் நடிகர் பாத்திரம் கழுவுகின்றார்!! காரணம் தெரியுமா?

  • May 9, 2023
  • 0 Comments

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பனாகவும் நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் தொடர்பில் செய்தி வெளியாகி உள்ளது. இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். மேலும் பொற்கோவிலில் நேர்த்திக்கடனின் ஒரு பகுதியாக அங்குள்ள பாத்திரங்களை சுத்தப்படுத்தும் இடத்திற்கு சென்று மணலால் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து சேவையும் செய்துள்ளார் வித்யுத் ஜாம்வால். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி […]

செய்தி தமிழ்நாடு

நாய் உறவினர்களை தேடி அலையும் சோகம்

  • May 9, 2023
  • 0 Comments

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியூருக்கு செல்ல குடும்பத்துடன் வந்த உறவினர்களுடன் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று அவர்களுடனே வந்துள்ளது. அதனை பொறுப்பெடுத்தாமல் பேருந்து நிலையத்திலேயே விட்டு விட்டு அவர்கள் குடும்பத்துடன் வெளியூருக்கு பஸ் ஏறிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பேருந்தில் ஏறிச் சென்றதைக் கண்ட அந்த நாய் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருக்கும். பஸ்களிலும் வரும் பஸ்களிலும் […]

ஆசியா

கனடாவின் நடவடிக்கைக்கு பதிலடி; அந்நாட்டு தூதரை வெளியேற்றிய சீனா

  • May 9, 2023
  • 0 Comments

கனடா மற்றும் சீனா இடையே கடந்த 2018ம் ஆண்டு முதல் பதற்ற நிலை காணப்படுகிறது. சீனாவின் ஹூவாவெய் பகுதியை சேர்ந்த முக்கிய நபரை கனடா கைது செய்தது. இதற்கு பதிலடியாக சீனாவும், கனடா நாட்டை சேர்ந்த 2 பேரை தனது நாட்டில் வைத்து கைது செய்தது.அவர்கள் 3 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவின் கொள்கையை கனடா பின்பற்றுகிறது என கூறி தொடர்ந்து அந்நாடு மீது சீனா குமுறலை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சீனாவில் ஜின்ஜியாங் […]

Skip to content