உலகம்

நியூயோர்க்கில் 38.1 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பைபிள்

  • May 18, 2023
  • 0 Comments

நியூயோர்க்கில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹிப்ரூ மொழி விவிலிய நூல் (பைபிள்) ஒன்று 38.1 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நடந்த ஏலத்தில் மிக அதிக விலையில் விற்கப்பட்ட கையெழுத்துப் பிரதி என்ற சாதனையையும் அது படைத்தது. கோடெக்ஸ் சாஸூன் (Codex Sassoon) என்ற அந்தப் பைபிள் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குள் ஏறக்குறைய எழுதிமுடிக்கப்பட்டு இன்றுவரை இருக்கின்றது. அந்த ஏலம் இருவருக்கு இடையே 4 நிமிடங்களுக்கு நடந்ததாக ஏலத்தை நடத்திய […]

இலங்கை

கொழும்பில் மாயமான யாழ் இளைஞன் – 7 மாதங்களாக தேடும் குடும்பத்தினர்

  • May 18, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் காணாமல் போயுள்ளார். கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணமல்போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. எனினும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் […]

உலகம்

நியூஸிலாந்து விடுதியில் வேண்டுமென்றே தீ வைப்பு? பொலிஸார் தகவல்

  • May 18, 2023
  • 0 Comments

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் விடுதியொன்று தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக இருக்கலாம் என தாம் கருதுவதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 4 மாடிகள் கொண்ட இக்கட்டடம் நேற்று அதிகாலை தீப்பற்றியதால், குறைந்தபட்சம 6 பேர் பலியானதுடன், இச்சம்பவத்தின் பின் 20 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடும் சேதங்கள் ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை. இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தீ வைப்பு சம்பவமாக நாம் கருதுகிறோம் என […]

ஐரோப்பா

பிரான்ஸில் தடை செய்யப்படவுள்ள பொருள்!

  • May 18, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கஞ்சா போதைப்பொருளுக்கு தடை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். மருத்துவத் தேவைக்காக பயன்படுத்தப்படும் கஞ்சா போதைப்பொருளுக்கு தடை விதிக்கப்படவுள்ளது. hexahydrocannabinol அல்லது HHC என அழைக்கப்படும் இந்த கஞ்சா பயன்பாடு பிரான்சில் அண்மையில் அனுமதிக்கப்பட்டது. மிகச் சிறிய அளவிலான பதப்படுத்தப்பட்ட கஞ்சா மூலிகை மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வரும் வாரங்களில் அவற்றுக்கு தடை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சர் François Braun தெரிவிக்கையில், அடுத்த சில வாரங்களில் […]

இலங்கை

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலுக்கு அணிதிரளுமாறு அறிவிப்பு

  • May 18, 2023
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபடுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள், தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அனைதினதும் அன்றாட செயற்பாடுகளை நிறுத்தி நிகழ்வில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் கடந்த 2009 மே 18 ஆம் திகதி […]

இலங்கை

கொழும்பில் பெரும் சோகம் – தாயின் கணவரால் கொலை செய்யப்பட்ட சிறுவன்

  • May 18, 2023
  • 0 Comments

கொழும்பில் தனது தாயின், கணவர் எனக்கூறப்படும் நபரினால் தாக்கப்பட்ட 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 50 வயதான சந்தேகநபர், கடந்த 12 ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்குச் சென்று, மேற்படி, இளைஞரின் தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்போது, மதுபோதையில் வீட்டுக்கு வந்து சத்தம் போடவேண்டாம் என குறித்த சிறுவன் அவரை திட்டியுள்ளார். அதனையடுத்து, சந்தேக நபர் இரும்பு கம்பியால் சிறுவனை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மர்ம நபர்களால் காத்திருந்த அதிர்ச்சி

  • May 18, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் A 46 அதிவேக பாதையில் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்ஏப்ரல் 15 ஆம் திகதி ஜெர்மனியின் அதிவேக போக்குவரத்து பாதை A 46 இல் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது ஹைட்பேர் பிரதேசத்தை நோக்கி பயணித்த ஒரு வாகனத்தினுடைய வாகன சாரதியானவர் மற்றைய வாகனத்தை முந்தி செல்ல முயற்சி செய்த பொழுது மற்றைய வாகனத்தில் இருந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனத்தை ஓட்டி வந்த வாகன சாரதிக்கு எவ்வித […]

இலங்கை

இலங்கையில் திருட்டுக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு நேர்ந்த பரிதாபம்

  • May 18, 2023
  • 0 Comments

இலங்கையில் திருட்டுக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் வீட்டின் கூரை மீது ஏறி தப்பிச் செல்ல முயற்சித்தபோது, கீழே விழுந்துள்ளார். இதனால் கால் முறிந்த நிலையில் பொலிஸாரிடம் சிக்கியதாக இமதுவ பொலிஸார் தெரிவித்தனர். அமுகொட்டுகந்த, பிலான பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய சந்தேக நபரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற கறுவாப்பட்டை திருட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், […]

செய்தி தென் அமெரிக்கா

மெக்சிகோவில் 50 புலம்பெயர்ந்தோர் கடத்தல்!! விசாரணைகள் தீவிரம்

  • May 17, 2023
  • 0 Comments

வணிகப் பேருந்தில் கடத்தப்பட்ட சுமார் 50 புலம்பெயர்ந்தோரை மெக்சிகோ பாதுகாப்புப் படையினர் தேடி வருவதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். இந்த கடத்தல் மத்திய மாநிலமான சான் லூயிஸ் பொடோசியில் நடந்ததாக அங்குள்ள சட்ட அமுலாக்க அலுவலகம் தெரிவித்துள்ளது. இரண்டு ஓட்டுநர்களும் காணாமல் போன பேருந்தும், செவ்வாயன்று எல்லை மாநிலமான நியூவோ லியோனில் மேலும் வடக்கே கண்டுபிடிக்கப்பட்டது, சம்பவம் எப்போது நடந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை. புலம்பெயர்ந்தோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேசிய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் […]

செய்தி தென் அமெரிக்கா

கொலம்பிய அமேசானில் விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு குழந்தைகள் உயிருடன் மீட்பு

  • May 17, 2023
  • 0 Comments

கொலம்பிய அமேசானில் விமானம் விழுந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக காணாமல் போன பழங்குடியின குழந்தைகள் நால்வர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ புதன்கிழமை இதனை தெரிவித்தார். எங்கள் இராணுவப் படைகளின் கடினமான தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகு, மே 1 அன்று தெற்கு கொலம்பியாவில் விமான விபத்தில் காணாமல் போன நான்கு குழந்தைகளை உயிருடன் மீட்டுள்ளனர் என்று பெட்ரோ ட்விட்டரில் தெரிவித்தார்.

Skip to content