ஐரோப்பா

சீனாவில் அரசாங்கத்தை விமர்சித்த காமெடி நிகழ்ச்சி நிறுவனத்திற்கு அபராதம்!

  • May 19, 2023
  • 0 Comments

சீன தலைநகர் பீஜிங்கில் சியாகுவோ என்ற காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார். அப்போது அவர் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சியை நடத்திய சியாகுவோ நிறுவனத்துக்கு சுமார் ரூ.16 கோடி அபராதம் விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த […]

ஐரோப்பா

உக்ரைனில் 482 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

  • May 19, 2023
  • 0 Comments

உக்ரைனில் குறைந்தது 482 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக   அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 1,461 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர், அவர்களில் 979 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்று அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. “உக்ரைன் பிரதேசத்தின் ஒரு பகுதியைத் தற்காலிகமாக ஆக்கிரமித்ததன் காரணமாக காயமடைந்த குழந்தைகளின் சரியான எண்ணி்க்கையை நிறுவுவது சாத்தியமில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். தற்போது 18 வயதுக்குட்பட்ட 401 பேர் காணவில்லை என்றும், 12,561 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் […]

வட அமெரிக்கா

கனடாவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – ஒருவர் பலி

  • May 19, 2023
  • 0 Comments

கல்கரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். கல்கரியின் ட்ரக் தரிப்பிடமொன்றில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருப்பதனை பொலிஸார் அவதானித்துள்ளனர்.ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்து விட்டதாகவும் படுகாயமடைந்த மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் உள்ள பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு : முதல் இடத்தை பிடித்த இந்தியர்!

  • May 19, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள பணக்காரர்களின் பட்டியலை சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ஹிந்துஜா குடும்பம் தொடர்ந்து இந்த வருடமும் முதலிடத்தில்,  உள்ளது. கோபி ஹிந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர் இந்திய கூட்டு நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தை நடத்தி வருகின்றனர்.  அவர்களின் சொத்து மதிப்பு 6 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இதேவேளை இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 14 ஆண்டுகளில் முதல் முறையாக 6 ஆக சரிந்துள்ளது. சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள பயணக்காரர்களின் பட்டியலின்படி, முதல் […]

ஆசியா

ஈரானில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

  • May 19, 2023
  • 0 Comments

ஈரானில் மாஷா அமீனியின் மரணத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய மூவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானிய இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட ஆண்கள் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய நீதித்துறையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஜீத் காஸிமிஇ சலேஹ் மிர்ஹாஷேமிஇ சயீட் யகோபி ஆகியோருக்கே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நடவடிக்கை பாதுகாப்புப் படையினர் மூவரின் மரணத்துக்கு வழிவகுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

வட அமெரிக்கா

Apple நிறுவனம் ஊழியர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடு!

  • May 19, 2023
  • 0 Comments

Apple நிறுவனம் அதன் ஊழியர்களுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ChatGPTயைப் பயன்படுத்தவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்றதொரு தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் Apple நிறுவனம் இருப்பதே அதற்குக் காரணம் என குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வாயிலாக நிறுவனத்தின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துவிடும் என்ற கவலை Appleக்கு இருக்கிறது. அதனால் Microsoft நிறுவனத்தின் Copilot செயலியையும் பயன்படுத்த வேண்டாம் என நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.மென்பொருள் குறியீட்டை உருவாக்கச் செயலி பயன்படுத்தப்படுவதாக […]

ஆஸ்திரேலியா செய்தி

ரஸ்யாவிற்கு எதிராக புதிய தடைகள் அறிவிப்பு!

  • May 19, 2023
  • 0 Comments

ரஸ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை விதிப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஜி7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தடைகுறித்து அறிவித்துள்ளார். அணுசக்தி ஆராய்ச்சி உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆயுத உற்பத்தி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள ரஸ்யாவின் தேசிய அணுசக்தி கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனங்களை இலக்குவைத்தே அவுஸ்திரேலியா புதிய தடைகளை அறிவித்துள்ளது. ரஸ்யாவின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனமான ரொஸ்நெவ்ட் உட்பட வேறு பல நிறுவனங்களையும் அவுஸ்திரேலியா இலக்குவைத்துள்ளது. ரஸ்யாவின் போரினால் ஏற்பட்டுள்ள சர்வதேச தாக்கத்திற்கு தீர்வை காண்பதற்காக ஜி7 நாடுகளும் […]

பொழுதுபோக்கு

எந்த அவசியமும் இல்லை!! ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ராஷ்மிகா மந்தனா பதில்

  • May 19, 2023
  • 0 Comments

தன்னை பற்றி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்திருக்கிறார். அவரது ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஃபர்ஹானா படத்தின் புரோமோஷனுக்காக கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், தெலுங்கு திரையுலகம் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். கம்பேக் கொடுப்பதற்கு எனக்கு ஒரு நல்ல படம் அமைய வேண்டும். நல்ல கதாபாத்திரங்கள் நடித்தால் மீண்டும் தெலுங்கில் நடிக்க தயாராக இருக்கிறேன். புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ரஷ்மிகா மந்தனா […]

இந்தியா

சக தோழன் கொடுத்த பரிசை ஏற்க மறுத்த மாணவி- நிகழ்ந்த பயங்கரம்!

  • May 19, 2023
  • 0 Comments

இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில், தன் சக மாணவன் கொடுத்த பரிசை ஏற்க மறுத்த மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிரேட்டர் நொய்டாவிலுள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில், மூன்றாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் அனுஜ் மற்றும் சிநேகா. இருவருக்கும் 21 வயதுதான் ஆகிறது.நேற்று, மதியம் 1.30 மணியளவில், ஹாஸ்டலில் தங்கியிருக்கும் அனுஜ், சிநேகாவை சந்தித்துள்ளார்.இருவரும் பேசிக்கொள்ளும் மற்றும் கட்டியணைத்துக்கொள்ளும் காட்சிகள் அங்குள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. அனுஜ் ஏதோ பரிசுப்பொருள் ஒன்றை சிநேகாவுக்குக் கொடுக்க, […]

ஆசியா

பசுபிக் சமுத்திரத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

  • May 19, 2023
  • 0 Comments

பசிபிக் சமுத்திரத்தில்  இன்று 7.8 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பிராந்தியத்திலுள்ள நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன. நியூ கலிடோனியாவின்  லோயல்ட்டி ஐலண்ட்ஸ் தீவுகளுக்கு தென் கிழக்கில் 37 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்கப் பூகோள அளவையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பூகம்பத்தையடுத்து வனுவாட்டுவின் சில கரையோரங்களை 3 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும்,  பிஜி,  கிரிபாட்டி,  நியூஸிலாந்து கரையோரங்களில் 0.3 முதல் 1 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும் அடையக்கூடும் என அமெரிக்காவின் […]

Skip to content