ஐரோப்பா

சவூதி அரேபியாவிற்கு செல்லும் செலன்ஸ்கி!

  • May 19, 2023
  • 0 Comments

உக்ரேனிய ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலேன்ஸ்கி இன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார். சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரை அவர் இன்று சென்றடைந்துள்ளார் என சவூதி அரேபியாவின் அல் ஹதாத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அரபு லீக் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக அவர் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் மத்திய கிழக்குக்கு ஜனாதிபதி ஸேலேன்ஸ்கி விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். ‘சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளேன். அரபு லீக் உச்சி மாநாட்டில் உரையாற்றுவேன். […]

ஐரோப்பா

நடுவானில் தீப்பிடித்த விமானத்திலிருந்த சூட்கேஸ்!

  • May 19, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்றிலிருந்த சூட்கேஸ் ஒன்று திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பீதியடைந்தனர். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென ஒரு சத்தம் கேட்டுள்ளது.அதைத் தொடர்ந்து சூட்கேஸ் ஒன்றிலிருந்து புகையும் நெருப்பும் வெளிவரத் துவங்கியுள்ளன. உடனடியாக சிலர் அந்த சூட்கேஸ் மீது தண்ணீரை ஊற்றியும் தீ அணையாமல் பரவத் துவங்கவே, விமானத்திலிருந்தவர்கள் பீதியடைந்துள்ளனர். விடயம் என்னவென்றால், அந்த சூட்கேசுக்குள் ஒரு இ – சிகரெட் இருந்துள்ளது. […]

பொழுதுபோக்கு

தினம் தினம் வேதனையில் துடிக்கும் காஜல்! நெகிழ்ச்சியான பதிவு

  • May 19, 2023
  • 0 Comments

நாள்­தோ­றும் தன் மகனை விட்டுவிட்டு படப்­பி­டிப்­புக்­குக் கிளம்­பும்போது தன்­ம­னம் வேதனை­யில் துடிப்­ப­தா­கச் தென்னிந்திய பிரபல நடிகை காஜல் அகர்­வால் தெரிவித்துள்ளார். இதற்­காக பெற்ற மகனை அலட்­சி­யப்­ப­டுத்­து­வ­தாக யாரும் கரு­தி­வி­டக் கூடாது என்­றும் தன் மக­னுக்கு முன்னால் ஒரு பல­மான தாயாக நிற்­ப­தையே தாம் விரும்­பு­வ­தா­க­வும் அவர்­ஒரு பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார். “இன்­னும் பச்சிளம் குழந்தை­யாக உள்­ள என்­ மக­னுக்­காக உரிய நேரத்தை ஒதுக்­கு­கி­றேன். அன்பைப் பகிர்­வ­தி­லும் குறை வைப்­ப­தில்லை. என் மக­னின் தேவை­கள் நிறை­வே­று­வதை உறுதி செய்­வ­து­டன், எனது […]

இலங்கை

விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை!

  • May 19, 2023
  • 0 Comments

நாட்டில் தற்போது வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவிவரும் நிலையில்,  பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் வைரஸ் காய்ச்சல்,  டெங்கு மற்றும் இன்புளுவென்சா என 3 காய்ச்சல் வகைகள் பரவி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை என அறியாமல் பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். பெரசிட்டமோல் அல்லாத வலி நிவாரணி எடுத்தால் […]

இந்தியா

இந்தியாவில் வானிலிருந்து மழையாக கொட்டிய புழுக்கள் (வீடியோ)

  • May 19, 2023
  • 0 Comments

இந்தியாவில் வானிலிருந்து புழுக்கள் மழைபோல் கொட்டுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தில், செவ்வாய்க்கிழமையன்று, திடீரென வானிலிருந்து வெள்ளை நிற புழுக்கள் மழைபோல் கொட்டியுள்ளன. சாலை முழுவதும் புழுக்களாக காணப்படும் அந்த அருவருப்பை ஏற்படுத்தும் காட்சியைக் கண்ட கடைக்காரர்கள் உடனடியாக கடைகளை மூடத்துவங்கியுள்ளனர். இப்படி வானிலிருந்து புழுக்கள் கொட்டுவது இது முதல் முறை இல்லையாம். ஏற்கனவே சீனாவில் ஒரு முறை இதேபோல மண்புழுக்கள் வானிலிருந்து மழையாகக் கொட்ட, வெளியே செல்லும் மக்கள் குடைகளைப் […]

இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சேதம் : 6 பில்லியன் வழங்குமாறு கோரிக்கை!

  • May 19, 2023
  • 0 Comments

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயினால் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு துறைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்களிடம் இருந்து 06 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நட்டஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வன அரன அறக்கட்டளை உள்ளிட்ட 04 தரப்பினர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர். தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் […]

ஆசியா உலகம்

உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளரான சீனா!

  • May 19, 2023
  • 0 Comments

உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. 2023 முதல் காலாண்டில் 1.07 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த காலகட்டத்தில்  ஜப்பான் 954, 185 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கிடையில்  பெட்ரோலில் இயங்கும் கார்களுக்குப் பதிலாக மின்சார கார்களுக்கு சீனா முன்னுரிமை அளித்தது அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். தற்போதுஇ ​​உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்கள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய […]

இலங்கை

குரங்கு ஏற்றுமதி குறித்த விசாரணை திகதியிடப்பட்டுள்ளது!

  • May 19, 2023
  • 0 Comments

ஒரு இலட்சம் இலங்கை குரங்குகளை சீன நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

பொழுதுபோக்கு

‘STR 48’ இல் சிம்புவுடன் இணையும் தமிழ் நடிகை!! அப்போ தீபிகா படுகோனுக்கு என்ன நடந்தது?

  • May 19, 2023
  • 0 Comments

நடிகர் சிம்பு தற்போது தனது சினிமாப்பயணத்தில் உச்சத்தில் இருக்கிறார், மேலும் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தனது அடுத்த படமான ‘STR 48’ படப்பிடிப்பை தொடங்க உள்ளார். இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு தற்போது லண்டனில் தனது கதாபாத்திரத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க திரைப்பட தயாரிப்பாளர்களால் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் […]

ஆஸ்திரேலியா

அல்-கொய்தா அமைப்பால் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பின் விடிவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய மருத்துவர்

  • May 19, 2023
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்காவில் அல்-கொய்தா தீவிரவாதிகளால் சிறை வைக்கப்பட்டு இருந்த 88 வயதுடைய அவுஸ்திரேலிய மருத்துவர் கென்னத் எலியட் 7 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் மாலி மற்றும் புர்கினா பாசோ நகரின் இடையே உள்ள எல்லைக்கு அருகே அவுஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவர் கென்னத் எலியட் மற்றும் அவரது மனைவி ஜோஸ்லின் ஆகிய இருவரையும் அல்-கொய்தா தீவிரவாதிகள் சிறைப்பிடித்தனர்.இந்த அவுஸ்திரேலியா தம்பதி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அங்கு மருத்துவ கிளினிக் வைத்து நடத்தி வந்தது […]

Skip to content