“மாமன்னன்” படம் தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி, தொடர்ந்து சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக ஜொலித்து வந்தார். இதையடுத்து அரசியலில் எண்ட்ரி கொடுத்த உதயநிதி, தற்போது அமைச்சர் ஆனதால், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்தார். உதயநிதி கடைசியாக நடித்த திரைப்படம் மாமன்னன். […]