ஐரோப்பா

ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில் ஷெல் தாக்குதல் : இருவர் உயிரிழப்பு!

  • June 2, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில் ஷெல் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். உக்ரேனிய எல்லைக்கு அருகில் உள்ள மஸ்லோவா பிரிஸ்டன் நகரில் சாலையில் பீரங்கி குண்டுகள் மோதியதால், அவ்வழியாகச் சென்ற கார்கள் மீது ஷெல் துண்டுகள் விழுந்ததாக வியாசெஸ்லாவ் கிளாட்கோ கூறினார். குறித்த சம்பவத்தில், இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் செய்தி

அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை இடைநிறுத்துவதற்கு இரு அவைகளும் அனுமதி!

  • June 2, 2023
  • 0 Comments

அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை இடைநிறுத்துவதற்கு அந்நாட்டுப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரு சபைகளும் அங்கீகாரம் அளித்துள்ளன. கடன் வாங்குவதற்கு அமெரிக்க அரசுக்கு அனுமதிக்கப்பட்ட 31.38 ட்ரில்லியன் டொலர் கடன்அளவை கடந்த ஜனவரியிலேயே அமெரிக்க அரசு நெருங்கிவிட்டது. அதன்பின் அமெரிக்க அரசு நிதி நெருக்கடிக்களை எதிர்கொண்டு வந்தது. செலவுகளுக்குப் பணம் இல்லாமல் வங்குரோத்து அடையும் நிலையை அமெரிக்க மத்திய அரசு எதிர்கொண்டுவந்தது. இந்த உச்சவரம்பை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி […]

வட அமெரிக்கா

கியூபெக்கில் பாடசாலையொன்றின் கழிப்பறையில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கமரா

  • June 2, 2023
  • 0 Comments

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் கட்டினாயூவில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்ப பாடசாலையொன்றின் கழிப்பறையில் இவ்வாறு இரகசிய கமரா பொருத்தப்பட்டுள்ளது. கட்டினாயூ பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க பொலிஸார் விரைந்துள்ளனர்.பொலிஸார் குறித்த கமராவை மீட்டு உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரகசிய கமரா எவ்வளவு காலம் கழிப்பறையில் பொருத்தப்பட்டிருந்தது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை. சில வாரங்களுக்கு முன்னதாக இதே பாடசாலை கழிப்பறையில் […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!

  • June 2, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படிஇ இன்று (02) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ’22 கரட்’ ஒரு பவுன் தங்கத்தின் விலை 147000 ரூபாவாக  பதிவாகியுள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை 152 600 ரூபாவாக காணப்பட்ட ’22 கரட்’ ஒரு பவுன் தங்கத்தின் விலை 5600 ரூபாவால் இவ்வாறு குறைந்துள்ளது. இதனிடையே கடந்த வௌ்ளிக்கிழமை 165000 ரூபாவாக இருந்த ’24 கரட்’ ஒரு பவுன் தங்கம்  இன்றைய தினம் 159 000 […]

ஐரோப்பா

பெல்கோரோட் பிராந்தியத்திற்குள் நுழைய முயன்ற உக்ரைன் – விரட்டியடித்த ரஷ்ய ராணுவம் (வீடியோ)

  • June 2, 2023
  • 0 Comments

பெல்கோரோட் பிராந்தியத்திற்குள் நுழைய முயன்ற உக்ரைனிய ராணுவத்தை தடுத்து நிறுத்தி இருப்பதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கியது, தற்போது கிட்டத்தட்ட 16 மாதங்களாக மிக நீண்ட போராக நீடித்து வருகிறது.ரஷ்ய படைகள் உக்ரைனின் சில இடங்களை பிடித்து வைத்து இருக்கும் நிலையில், அதனை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைனிய ஆயுதப் படை எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தலைநகர் கீவ் […]

இலங்கை

தரமற்ற மருந்துகளை விநியோகித்த இந்தியானா நிறுவனம் : விசாரணைகள் ஆரம்பம்!

  • June 2, 2023
  • 0 Comments

இலங்கைக்கு தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்திய மருந்து நிறுவனம் தொடர்பில் மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குஜராத்தில் இயங்கி வரும் மருந்த தயாரிப்பு நிறுவனமான இந்தியானா நிறுவனம் வழங்கிய மருந்தினால் இலங்கையில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தை விசாரணைக்கு அழைத்த இந்திய மருந்து ஏற்றுமதி கவுன்சில், சம்பவம் குறித்து உள் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, சர்ச்சைக்குரிய மருந்தின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தவும், வழங்கப்பட்ட […]

இலங்கை

இறுதிச்சடங்கு செய்ய பணமில்லாததால் கணவன் செய்த செயல் !

  • June 2, 2023
  • 0 Comments

தனது மனைவியின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாததால் அவரது சடலத்தை இரகசியமாக வீட்டின் பின்புறத்தில் புதைத்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மனைவியின் சடலத்தை புதைத்த குற்றச்சாட்டில் அவரது கணவர் மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு செய்வது சட்டத்துக்கு முரணான செயல் என்பதாலேயே கணவர் கைது செய்யப்பட்டதாக மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் விஜயபுர, பண்டுகாபய புர பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தனது […]

செய்தி

“பொன்னியின் செல்வன் 2” படத்திற்கு வந்த சோதனை! என்ன நடந்தது தெரியுமா?

  • June 2, 2023
  • 0 Comments

‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கல்கி, தென்னகத்தை ஆண்ட சோழ மன்னனான ‘அருண்மொழி வர்மன்’ பற்றிய கதையை, வரலாற்று சுவடுகளுடன் புனையப்பட்ட நாவலாக எழுதிய நாவல் ‘பொன்னியின் செல்வன்’. இதனை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கிய […]

தென் அமெரிக்கா

காதலனின் ஆசைக்காக பின்னழகை அதிகரித்த அழகிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

  • June 2, 2023
  • 0 Comments

தன் காதலனின் ஆசைப்படி தன் பின்னழகை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண், பரிதாபமாக பலியாகியுள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த அழகிய மொடலான Lygia Fazio (40)வின் காதலன், அவரது பின்னழகை அதிகரிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன்படி, அழகியல் அறுவை சிகிச்சை ஒன்றை செய்துகொண்டுள்ளார் Lygia. ஆனால், பின்பக்கத்தை பெரிதாக்குவதற்காக உடலுக்குள் பொருத்தப்பட்ட பை சிதைந்து, அதிலுள்ள ரசாயனங்கள் Lygiaவின் உடல் முழுவதும் பரவிவிட்டன. அவற்றை அகற்றுவதற்காக மூன்று மாதங்களாக சிகிச்சை எடுத்துக்கொண்டார் Lygia.ஆனால், கடந்த மாதம் […]

வட அமெரிக்கா

மெக்சிகோவில், மனித எச்சங்கள் அடங்கிய பைகள் மீட்பு!

  • June 2, 2023
  • 0 Comments

மெக்சிக்கோவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரமொன்றில் அதிகாரிகள் மனித எச்சங்கள்அடங்கிய 45 பைகளை  மீட்டுள்ளனர். கடந்தவாரம் காணாமல்போன இளைஞர்கள் சிலரை தேடிச்சென்றவேளை குவாடலஜரா என்ற நகரில் மனித எச்சங்கள் அடங்கிய குறித்த பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அதில், ஆண்களினதும் பெண்களினதும் உடல்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இன்னமும் எத்தனை உடல்கள் காணப்படுகின்றன என்பது தெரியவில்லை . மனித எச்சங்கள் நிலப்பகுதி மிகவும் சவாலான ஒன்று என்பதாலும் போதிய வெளிச்சம் இன்மையாலும் தேடுதல் நடவடிக்கைகள் பல நாட்கள் தொடரலாம் என அதிகாரிகள் […]

Skip to content