இலங்கை

2 மாதங்களில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் சினோபெக் நிறுவனம்!

  • June 5, 2023
  • 0 Comments

இரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்கீடு  முறைமையை நீக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார் திவுலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைத்திருத்தம் முன்னெடுக்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மாத இறுதியில் எரிபொருள் முன்பதிவை தாமதமாக்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் இரண்டு மாதங்களில்,  150 நிரப்பு நிலையங்களுடன் சினோபெக் நிறுவனம் விநியோக நடவடிக்கையை […]

இலங்கை

யானை தாக்கியதால் காதலி பலி… காதலனுக்கு விளக்கமறியல்

  • June 5, 2023
  • 0 Comments

உடதியலும பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட யுவதியின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த மே மாதம் 11 ஆம் திகதி கொஸ்லந்த தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு சென்ற இவர்கள் இருவரும் பாதுகாப்பற்ற பகுதி என அறிவிக்கப்பட்ட இடத்தில் இரவு முகாமிட்டு தங்கியுள்ளனர். இதன்போது அவர்களைக் […]

பொழுதுபோக்கு

அம்பரீஷ் – சுமலதா மகனுக்கு நடந்த பிரம்மாண்ட திருமணம்

  • June 5, 2023
  • 0 Comments

ரெபெல் ஸ்டார் அம்பரீஷ் – நடிகை சுமலதா ஜோடியின் மகனான அபிஷேக் அம்பரீஷ் திருமணம் இன்று (ஜூன் 5) பிரம்மாண்டமாக பெங்களூரில் உள்ள சாம்ரவஜ்ரா அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. ஆடை வடிவமைப்பாளர் அவிவா பிடாபா என்பவரை அபிஷேக் அம்பரீஷ் திருமணம் செய்துகொண்டார். அபிஷேக் அம்பரீஷ் தனது நீண்ட நாள் காதலியான அவிவாவை கவுடா பாரம்பரியப முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இத்திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். மணமக்களை சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் வாழ்த்தி உள்ளனர். முன்னாள் […]

இலங்கை

வெளிநாட்டில் பணியாற்ற அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு! அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

அரச பணியாளர்களுக்கு, ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார் ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அந்நியச் செலாவணி நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அரச ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாத விடுமுறையுடன் ஐந்து ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்ய அரசாங்கம் அனுமதித்தது. குறித்த அரச ஊழியர்கள் நாடு திரும்பியவுடன் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் கைக்கடிகாரங்களை கொள்ளையிடும் திருடர்கள் : அதிக லாபம் பார்ப்பதாகவும் தகவல்!

  • June 5, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் திருடப்படுவதும், பின் திருடப்பட்ட கைக் கடிகாரங்கள் விற்கப்படுவதும் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலையுயர்ந்த கடிகாரங்களைத் திருடி அவற்றை கறுப்புச் சந்தையில் விற்பது அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகள் அதிக லாபத்தை பெறுவதற்காக கடிகாரங்களை திருடி விற்பதை தொழிலாகக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, போதை மருந்து விற்பனையை விட விலை உயர்ந்த கடிகாரங்களை திருடுவதில் அதிக லாபம் கிடைப்பதாக முன்னாள் வாட்ச் டீலர் ஒருவர் தெரிவித்துள்ளார். லண்டனில் மதிப்புள்ள உயர்தர கடிகாரங்களைத் […]

ஐரோப்பா வட அமெரிக்கா

கனடாவில் தீயை அணைக்க தீயணைப்புப் படையினரை அனுப்பி வைக்கும் பிரான்ஸ்

  • June 5, 2023
  • 0 Comments

கனடாவின் பல்வேறு இடங்களில் நிலவும் காட்டுத் தீயினை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் உதவிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக கியூபெக் மாகாணத்தில் நிலவி வரும் காட்டுத் தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் 100 தீயணைப்புப் படைவீரர்களை அனுப்பி வைக்க உள்ளது.பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் இந்த விடயம் தொடர்பில் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு தீயணைப்புப் படையினரை அனுப்பி வைப்பது குறித்து கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நன்றி பாராட்டியுள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு காணப்படுவதாகவும் இந்த உறவுகள் முன்னொருபோதும் […]

உலகம் ஐரோப்பா

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்த உலக உணவுப் பொருட்களின் விலை!

  • June 5, 2023
  • 0 Comments

உலக உணவுப் பொருட்களின் விலை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு ஏஜென்சியின் விலைக் குறியீடு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு ஏஜென்சியின் விலைக் குறியீட்டின்படி, காய்கறி எண்ணெய்கள், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் சரிவினால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களைக் கண்காணிக்கும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) விலைக் குறியீடு, முந்தைய மாதத்தில்  127.7 ஆக பதிவாகியிருந்தது. இது […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வாடகைக்கு குடியிருப்பவர்களா நீங்கள் : உங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர செய்தி!

  • June 5, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் வீட்டு வாடகை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு மாதத்திற்கு £1,213  ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வாடகை வீட்டொன்றின் மாதாந்த கட்டணமாக £1,199  பவுண்ட்ஸ் அறவிடப்பட்டது.  இது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், 1.2 வீத அதிகரிப்பை குறிக்கிறது. இந்த அதிகரிப்பானது குத்தகைதாரர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் இருவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடகைதாரர்கள் தங்கள் வாடகையைச் செலுத்த சிரமப்படுவார்கள் எனவும் வாடகை உத்தரவாதக் காப்பீட்டைக் கருத்தில் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாடகை வீடுகளின் அடிப்படையில் […]

பொழுதுபோக்கு

இலங்கையின் கிழக்கு ஆளுநருக்கு கமல் ஹாசன் வாழ்த்து

  • June 5, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை மக்களுக்குச் செய்ய வாழ்த்துத் தெரிவிப்பதாக கமல்ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கமல்ஹாசனை கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.  

உலகம்

கச்சா எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு!

  • June 5, 2023
  • 0 Comments

கச்சா எண்ணெய் உற்பத்தியை  நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய் என்ற அளவில் குறைக்கப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. அரேபியாவின் எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் இதனை அறிவித்துள்ளார். இதன்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ஒரு அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெ பீப்பாய் ஒன்றின் விலை 77.64 அமெரிக்க டொலராக காணப்படும் நிலையில்இ எதிர்காலத்தில் 1.51 அமெரிக்க […]

Skip to content