ஒடிசா ரயில் விபத்து : பிணவறையில் உயிருடன் இருந்த மகனை மீட்ட தந்தையின் பாசப் போராட்டம்!
மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 280 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் ஹவுராவில் கடை வைத்திருக்கும் பிஸ்வஜித் என்பரும் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது. இதனை நம்ப மறுத்த அவருடைய தந்தையான ஹெலராம் மாலிக், சுமார் 230 கிமீ தூரம் பாலசோருக்குப் பயணித்து பிணவறையில் மயங்கிய நிலையில், இருந்த தனது மகனை மீட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]