இலங்கை

மாணவர்களுக்கு மின்னஞ்சல் குறித்து குற்றப்புலனாய்வினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • June 6, 2023
  • 0 Comments

பாடசாலை மாணவர்கள் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கும் போது தமது சரியான வயதைக் குறிப்பிட வேண்டும், அத்துடன் தமது பெற்றோரின் தகவல்களை வழங்கக் கூடாது எனவும் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். ஒன்லைன் மூலமான கல்விச் செயற்பாடுகள் தற்போது அதிகமாக இருப்பதால் சிறுவர்களுக்கு கைத்தொலைபேசியைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே கைத்தொலைபேசிகளை வழங்கும் போது மின்னஞ்சல் கணக்குகளைத் திறக்கும் போது பெற்றோரின் […]

இலங்கை

மருந்துகளின் விலையை குறைக்க அமைச்சரவை ஒப்புதல்!

  • June 6, 2023
  • 0 Comments

மருந்துகளின் விலையை குறைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி  ஜூன் மாதம் 15 ஆம் திகதி 2023 முதல் 60 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை குறைக்கவும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மருந்துகளின் விலையை மறுபரிசீலனை செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (ஜூன் 06) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்த விடயத்தை அறிவித்துள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைக்காலமாக கணிசமான அளவில் அதிகரித்ததன் […]

உலகம்

பாடசாலையை விற்க முயன்ற மாணவர்கள்: இணையத்தில் வைரலாகும் விளம்பரம்

மாணவர்களின் குறும்புத்தனம் சில நேரங்களில் எல்லை மீறி சென்று விடும். அதை நிரூபிப்பது போன்று ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்குள்ள மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பள்ளிக்கூடத்தை விற்கும் விதமாக விளம்பரம் செய்துள்ளனர். அதனை ஒருவர் ஸ்கிரிஷாட் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டார். அதில், இது நல்ல பகுதி நேர சிறைச்சாலை. இதில் இருக்கும் 15 கழிவறைகளிலும் வடிகால் பிரச்சினை இருக்கிறது. ஆனால் இங்கு நல்ல சமையல் […]

இலங்கை

தனிநபர்களின் பாதுகாப்பிற்காக 5,400 பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம்!

  • June 6, 2023
  • 0 Comments

அமைச்சர்களாகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ இல்லாத தனிநபர்களின் பாதுகாப்பிற்காக மொத்தம் 5,400 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம்  இன்று (06) கூடிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு விவரங்கள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடையங்களுக்கு அமைய தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் […]

வட அமெரிக்கா

வீதிப் போக்குவரத்து விதியை மீறி சாரதி… கைது செய்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • June 6, 2023
  • 0 Comments

அமெரிக்க கனடிய எல்லைப் பகுதியில் வீதி போக்குவரத்து விதிகளை மீறிய சாரதி ஒருவரை கனடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபரிடமிருந்து பெருந்தொகை கஞ்சா போதை பொருளும் பணமும் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்க சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.181 கிலோகிராம் எடையினுடைய கஞ்சா போதை பொருளும் சுமார் 6 லட்சம் டாலர் பணமும் இந்த நபரிடம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த கஞ்சா போதை பொருளின் சந்தை பெறுமதி சுமார் மூன்றரை லட்சம் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது […]

இலங்கை

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் ரூபாய் மதிப்புடைய பொருட்கள்!

  • June 6, 2023
  • 0 Comments

டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 2000 ரூபா பெறுமதியான பொருட்கள் கொண்ட கொள்கலனை இலங்கை சுங்கப் பிரிவினர் மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த கொள்கலனில் 200 மில்லியன்  ரூபாய் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள், மூன்று வாகன உதிரிப்பாகங்கள், மதுபாட்டில்கள் மற்றும் சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இலங்கை

ஊடகத்துறையில் பிரித்தானியாவிற்கு இணையான சட்டங்களை அறிமுகம் செய்ய தீர்மானம்!

ஊடகத்துறையில் பிரித்தானியாவிற்கு இணையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஊடகங்களை ஒடுக்குவதற்காக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தை முழுமையாக எதிர்ப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்திருந்தார். நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் தலைமையில் பந்துல குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, கெஹெலிய ரம்புக்வெல, மனுஷ நாணயக்கார ஆகிய […]

பொழுதுபோக்கு

ஆதிபுருஷ் படத்தை பார்க்க அந்த கடவுளே நேரில் வருகின்றார்!! என்ன அதிசயம் தெரியுமா?

  • June 6, 2023
  • 0 Comments

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமா உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இராமாயணத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளனர். இதில் ராமராக பிரபாஸ் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16ஆம் திகதி ரிலீஸ் ஆக உள்ளது. சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உள்ள […]

இலங்கை

விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அமைச்சரவை ஒப்புதல்!

  • June 6, 2023
  • 0 Comments

விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி  விரிவான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அங்கீகரிப்பதற்கும், “எந்தவொரு அணு ஆயுத சோதனை அல்லது தடைசெய்யும் ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகளின் ஒப்பந்த விதிகளை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வழியமைக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கே  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 10.09.1996 அன்று விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  186 நாடுகள் கையெழுத்திட்டுள்ள […]

இலங்கை

கஜேந்திர குமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை!

  • June 6, 2023
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவு பிறப்பித்துள்ளது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கும்,  அவர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ததற்கும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை (06) ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Skip to content