சமந்தா போலவே காட்சியளிக்கும் இந்தப் புகைப்படத்தில் உள்ள நடிகை யார் என்று தெரிகிறதா?
Photo Credit: Insta/Aathmika மீசையா முருக்கு (2017) திரைப்படத்தில் அறிமுக கதாபாத்திரத்திற்காக அறியப்படும், ஆத்மிகா. Aathmika
Photo Credit: Insta/Aathmika மீசையா முருக்கு (2017) திரைப்படத்தில் அறிமுக கதாபாத்திரத்திற்காக அறியப்படும், ஆத்மிகா. Aathmika
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் கடுமையான எதிர் தாக்குதலை முன்னெடுக்கவிருக்கும் நிலையில், அந்த நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கு சென்றுள்ளார். ரஷ்யப் படைகளுக்கு எதிரான ஒரு பெரிய எதிர்த்தாக்குதலுக்குத் தயாராகிறது உக்ரைன். மட்டுமின்றி வழக்கமான வான்வழித் தாக்குதல்களையும் எதிர்கொண்டு போராடுகிறது. இந்த நிலையில் உக்ரைன் சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2014 முதல் ரஷ்ய சார்புப் படைகளுக்கு எதிராக போரிட்டு கொல்லப்பட்ட உக்ரேனிய வீரர்களுக்கு மத்திய கியேவில் உள்ள நினைவிடத்தில் […]
ஆசிரியர் இடமாற்றப் பிரிவிற்குப் பொறுப்பான தேசிய பாடசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஒருவர் இடமாற்றம் வழங்குவதற்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து இரண்டு ஆடுகளை இலஞ்சமாகப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது. குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் இந்த தகவலை அங்கு தெரிவித்தார். ஆசிரியர் ஒருவர் இடமாறுதல் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட பிரதிப் பணிப்பாளரை சந்திக்கச் சென்ற போது இரண்டு ஆடுகளை இலஞ்சமாக […]
ஜப்பான் பொதுவாக அமைதிக்கும் கட்டுப்பாடுக்கும் பெயர் பெற்ற நாடு. ஆனால் கடந்த வியாழன் அன்று, சர்ச்சைக்குரிய அகதிகள் மசோதா திருத்த சட்டம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டபோது கைகலப்பு ஏற்பட்டது. ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மசோதா, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி மற்றும் இரண்டு எதிர்க்கட்சிகளான கட்சிகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டது.இருப்பினும், ஜப்பானின் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய […]
அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றது. வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் ஜூலி சங், “இவ்வாரம் நான் மீண்டும் வொஷிங்டனுக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது முதலாவதாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப்பிரஜைகளைச் சந்தித்தேன். இருநாடுகளுக்கு இடையிலான 75 வருடகால நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை – அமெரிக்காவுக்கு […]
Photo Credit: Instagram/Janhvi Kapoor Janhvi Kapoor
அமெரிக்காவில் கைவிலங்கிடப்பட்ட பெண் தன் மீது எச்சில் உமிழ்ந்ததால், பொலிஸ் அதிகாரி முகத்தில் குத்தியது குறித்த வீடியோ வைரலானது. கொலராடோ மாகாணத்தில் ஏஞ்சலியா ஹால் என்ற பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.அவரது கைகள் விலங்கினால் பூட்டப்பட்டிருந்தது. அப்போது அப்பெண் லவ்லேண்ட் அதிகாரி ரஸ்ஸல் மராண்டோ மீது எச்சில் உமிழ்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரி ஏஞ்சலியா முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.உடனே அறையில் இருந்த மற்றொரு அதிகாரி தலையிட்டு மராண்டோவை விலக்கினார். இதுதொடர்பான வீடியோ […]
பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை எப்படிச் செய்தார் என்பதை விவரித்துக் காட்டும் பொருட்டு வீராங்கனை சங்கீதா போகத்தை குற்றம்சாட்டப்படுள்ள பிரிஜ் பூஷன் வீட்டிற்கு டெல்லி பொலிஸ் அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி பொலிஸாரின் இந்த நடவடிக்கை குறித்தும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி […]
யாழ்ப்பாணத்தில் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான அனைத்து வகையான அடக்குமுறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக சுயமரியாதை நடைபயணம் இன்று (10) நடைபெற்றது. சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு. சுயமரியாதை வானவில் பெருமை – 2023 நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்´ என்பதை வலியுறுத்தும் முகமாக சுயமரியாதை நடைபயணம் நடைபெற்றது. அத்துடன் LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்க்கையை நோக்கிய பயணத்தின் ஓர் […]
எதிர்காலத்தில் நாட்டில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்குவதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழி முட்டை தொழில் துறையினருடன் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார். சந்தையில் மீன் விலை அதிகரித்துள்ளதால், கோழி வியாபாரிகளும் விலையை உயர்த்தியுள்ளனர். பாரிய இலாபம் பெறும் நோக்கில் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு […]