கேதார்நாத் கோவில் சிவலிங்கம் மீது ரூபாய் நோட்டுகளை விசிறி எறிந்த பெண்
இந்தியாவில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத்தில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. கேதார்நாத் சிவன் கோயில் ஏப்ரல் முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த வகையில் இப்போது கோயில் திறந்திருப்பதால் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். […]