ஐக்கிய அரபு அமீரக அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
ஐக்கிய அரபு அமீரகத்தில் (அஜ்மான்) அடுக்குமாடி குடியிருப்புகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ ஏனைய பிரிவுகளுக்கும் பரவி எரியத் தொடங்கியது. சிவில் பாதுகாப்புக் படையினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், குறித்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அஜ்மான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறிப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.