இலங்கை

சிறுவர்கள் குற்றச்செயலில், ஈடுபடுவதையோ, துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதையோ ஊடகம் முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என வலியுறுத்தல்!

  • May 29, 2023
  • 0 Comments

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்துவதால் பல சமூகப் பிரச்சினைகள் தோன்றியுள்ளதாகவும், எனவே அதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவர் எம்.பி ரோஹினி குமாரி விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய சிறுவர்களுக்கான பாராளுமன்ற பேரவையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம்  தெரிவித்துள்ளது. இதன்படி  சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின்  அடையாளங்களை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொணருவது சம்பந்தப்பட்ட சிறுவர்களின் […]

ஆசியா

போயிங் விமானத்திற்கு போட்டியாக சீனாவில் கட்டப்பட்ட புதிய விமானம்!

  • May 29, 2023
  • 0 Comments

சீனாவில் முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானம் தனது முதலாவது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி சி919 என்ற ஜெட் விமானம் ஷாங்காய்க்கு பயணம் செய்திருந்தது. ஏர்பஸ் மற்றும் போயிங்கின்  ஜெட் விமானங்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், இது சீனாவின் கமர்ஷியல் ஏவியேஷன் கார்ப்பரேஷன் (கோமாக்) ஆல் கட்டப்பட்டுள்ளது. ஷாங்காய்-பெய்ஜிங்கிற்கு இடையிலான  பயணம், 130க்கும் மேற்பட்ட பயணிகளுடன், மூன்று மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டது.

ஐரோப்பா

லண்டனில் காரின் பின்பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த மனிதக் கை..!

  • May 29, 2023
  • 0 Comments

லண்டனில் மதுபான விடுதி ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பக்கத்திலிருந்து மனிதக் கை போன்று தோன்றும் ஒரு பொருள் தொங்கிக்கொண்டிருந்த காட்சி மக்களை திகிலடையச் செய்தது. மத்திய லண்டனிலுள்ள Euston என்னுமிடத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பக்கத்திலிருந்து கை ஒன்று தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்ட மக்கள் திகிலடைந்தனர். Louise என்னும் பெண் சமூக ஊடகம் ஒன்றில் இந்தக் காட்சி அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.நான் அந்தக் காட்சியைக் கண்டு நடுநடுங்கிவிட்டேன் என்று […]

இலங்கை

இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் வழங்க ஒப்புக் கொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கி!

  • May 29, 2023
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் ஸ்திரத்தன்மைக்காக சிறப்பு கொள்கை அடிப்படையிலான கடனுக்கு இன்று (29) ஒப்துல் அளித்துள்ளது. சிறப்பு கொள்கை அடிப்படையில் 350 மில்லியன் டொலரை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கவுள்ளது. இது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் நாட்டிற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் தொகுக்கப்பட்ட நிதி உதவியின் ஒரு பகுதியாகும் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன்  பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், பொருளாதார மீட்சி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான […]

இலங்கை

இலங்கையில் குறைவடையும் தங்கத்தின் விலை!

  • May 29, 2023
  • 0 Comments

இலங்கையில் வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தை ஆதாரங்களின்படி, திங்கட்கிழமை (மே 29) இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. இதன்படி, கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை 150,800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை, 1,63 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த வெள்ளிக்கிழமை,65 ஆயிரம் ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

இந்தியாவின் பிரபல ரவுடி கனடாவில் சுட்டுக் கொலை..

  • May 29, 2023
  • 0 Comments

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல ரவுடி சாம்ரா மற்றும் அவரது மூத்த சகோதரர் ரவீந்தர் கனடாவில் திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வெளியேறிய போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கனடா பொலிஸாரின் மிகவும் கொடூரமான ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்த 28 வயதுடைய பஞ்சாப்-ஐ பூர்விகமாக கொண்ட பிரபல ரவுடி சாம்ரா மற்றும் அவரது மூத்த சகோதரர் ரவீந்தர் ஆகிய இருவரும் கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து […]

பொழுதுபோக்கு

அஜித் மச்சானுடன் கவர்ச்சிக்கன்னி?? வெளியான புகைப்படத்தால் பெரும் பரபரப்பு

  • May 29, 2023
  • 0 Comments

நடிகை ஷாலினியின் சகோதரரும், நடிகர் அஜித்தின் மச்சானுமான ரிச்சர்ட் ரிஷி தொடர்பில் தற்போது சர்ச்சையான செய்தி ஒன்று இணையத்தில் வலம் வருகின்றது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஷாலினிக்கு ஷாமிலி என்கிற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்கிற சகோதரரும் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாவில் நடித்துள்ளனர். ஷாலினியின் தங்கை ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஹீரோயினாக நடித்த ஒரே திரைப்படம் வீர சிவாஜி. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக […]

ஐரோப்பா

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயார் – பிரித்தானியாவின் ரஷ்ய தூதர்

  • May 29, 2023
  • 0 Comments

ரஷ்யா உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது, ஆனால் அதனை உக்ரைன் விரும்பவில்லை என்று, பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கெலின், கடந்த மே 28ம் திகதி பிபிசிக்கு அளித்த பேட்டியில், உக்ரைன் போரில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை பற்றி பேசியுள்ளார்.அதில் ‘ரஷ்யா உக்ரைனுடனான போரில் அமைதியை விரும்புகிறது, ஆனால் சில நிபந்தனைகள் உள்ளது, முதலாவதாக உக்ரைனிலிருந்து ரஷ்யாவிற்கு எந்த அச்சுறுத்தலும் வரக்கூடாது. இரண்டாவதாக உக்ரைனில் ரஷ்யர்களை மோசமாக நடத்துகிறார்கள், குறிப்பாக பெல்ஜியத்தில் […]

இலங்கை

தொடர்ந்து வலுப்பெறும் இலங்கை நாணயம் : இன்றைய நாணய மாற்று விகிதம்!

  • May 29, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா இன்று (மே 29) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய கொள்முதல் விலை  289.89 ரூபாவாகவும், விற்பனை விலை 303. 26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

ஐரோப்பா

ரஸ்யா பெலாரசின் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு அணுவாயுதங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு!

  • May 29, 2023
  • 0 Comments

ரஸ்யா பெலாரசின் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு அணுவாயுதங்கள் வழங்கப்படும் என பெலாரசின் ஜனாதிபதி அலெக்ஸான்டர் லுகாசென்கோ தெரிவித்துள்ளார். மொஸ்கோவிலிருந்து மின்ஸ்கிற்கு சில அணுவாயுதங்களை மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் ரஸ்ய பெலாரஸ் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு அணுவாயுதங்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். ரஸ்ய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரான பெலாரஸ் ஜனாதிபதி பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.ரஸ்யாவிற்கும் எங்களிற்கும் இடையில் உள்ள உறவுகள் போல வேறு எந்த நாடும் நெருக்கமான உறவை […]