ஐரோப்பா

பிரான்ஸின் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த ஈரான் மொடல்!

  • May 29, 2023
  • 0 Comments

மஹ்லகா ஜபேரி என்ற ஈரானிய-அமெரிக்க மொடல் பெண்மணி கழுத்தை சுற்றி தூக்கு கயிற்றுடன் வடிவமைக்கப்பட்ட ஆடையை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரான்ஸின் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஈரானிய-அமெரிக்க மொடலான மஹ்லகா ஜபேரி, அவருடைய கழுத்தை சுற்றி தூக்கு கயிற்றுடன் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.ஈரானில் விதிக்கப்படும் தூக்கு தண்டனையை பிரதிபலிக்கும் விதமாக மஹ்லகா ஜபேரி கழுத்தை நெறிக்கும் தூக்கு கயிற்றுடன் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்துள்ளார். […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 999 என்ற அவசர தொலைப்பேசி சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவிப்பு!

  • May 29, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் மனநலப் பாதிப்பினால் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து அறிவிக்க பயன்படுத்தப்படும் 999 என்ற தொலைப்பேசி அழைப்பை நிறுத்த போவதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதன்படி வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த சேவையை பெற முடியாது எனக் கூறப்படுகிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வரை அதிகாரிகள் அனுப்பப்பட மாட்டார்கள் என்று ஆணையர் சர் மார்க் ரோவ்லி சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புச் சேவைகளிடம் கூறியுள்ளார். நிபுணத்துவ மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களைக் கையாள்வதைக் காட்டிலும் குற்றம் மற்றும் அதில் […]

இலங்கை

டொலரின் தொடர் வீழ்ச்சி ஆபத்தானது என எச்சரிக்கை!

  • May 29, 2023
  • 0 Comments

இலங்கையில் அண்மைக்காலமாக டொலருக்கு நிகரான  ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டொலரின் தொடர் வீழ்ச்சி ஆபத்தானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். கடன்களை திருப்பிச் செலுத்துதல்,  பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் வெளிநாட்டு இருப்புகளை அதிகரிப்பதற்கான மத்திய வங்கியின் முயற்சிகள் போன்ற முக்கிய மூன்று காரணிகளுக்காக தான் இலங்கைக்கு […]

இந்தியா

16 வயது சிறுமியை கத்தியால் குத்திக் கொன்ற காதலன்- கல்லால் முகத்தை சிதைத்த கொடூரம்

  • May 29, 2023
  • 0 Comments

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 16 வயது இளம்பெண் 40 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை 16 வயது இளம்பெண் ஒருவர் அவரது காதலரால் சஹாபாத் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே பலமுறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் சாக்ஷி எனவும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர் 20 வயதுடைய இளைஞர் சாஹில் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான […]

இந்தியா

மணிப்பூர் கலவரத்தில் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

  • May 29, 2023
  • 0 Comments

மணிப்பூரில் இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் மெய்டீஸ் பிரிவைச் சேர்ந்த பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். மெய்டீஸ் பிரிவினரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் கலவரமாக உருமாறியது. இதனையடுத்து ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கலவரம் […]

பொழுதுபோக்கு

‘ஜெயிலர்’ படத்தின் புதிய தகவலால் குழப்பத்தில் ரசிகர்கள்…

  • May 29, 2023
  • 0 Comments

நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஆக்‌ஷன் த்ரில்லரான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்திய அளவில் பிரமாண்டமாக வெளிவர உள்ளது. ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக முன்னர் கூறப்பட்டது. எனினும் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியதாகவும், மேலும் அவர் இன்னும் 4 அல்லது 5 நாட்கள் படப்பிடிப்பில் இருப்பார் என சமீபத்திய அறிக்கை வேறு கதையை வழங்குகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் குறுகிய ஷெட்யூல் சென்னையில் நடக்கிறது, ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியனாக மாறினார். ஜாக்கி […]

வட அமெரிக்கா

மகனுக்காக பேரக் குழந்தையை பெற்றெடுத்த பாட்டி!

  • May 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் தனது ஓரின சேர்க்கையாளரான மகனது விந்தணுவின் மூலம், குழந்தை பெற்று கொடுத்த தாயின் செயல் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. அமெரிக்காவில் நெப்ராஸ்கா பகுதியை சேர்ந்த செசிலி எலெட்ஜ் (59) என்ற பெண்ணுக்கு, மேத்யூ எலெட்ஜ் என்ற மகன் இருக்கிறார். மேத்யூ எலெட்ஜ் ஓரின செயற்கையாளராக இருந்த காரணத்தால், இலியட் டாஃபெர்ட்டி என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து, ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் தங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால், […]

ஐரோப்பா

இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து : நால்வர் உயிரிழப்பு!

  • May 29, 2023
  • 0 Comments

இத்தாலியில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இத்தாலியின் வட பகுதியிலுள்ள மேகியோர் ஏரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் இரு வெளிநாட்டவர்களும் அடங்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியைச் சேர்ந்த ஒரு பெண்இ ஓர் ஆண்இ ரஷ்யரான ஒரு பெண்இ இஸ்ரேலியரான ஓர் ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பா

பெலாரஸ் ஜனாதிபதிக்கு ரஷ்யாவில் நஞ்சூட்டப்பட்டதா? : எதிர்கட்சியின் குற்றச்சாட்டு!

  • May 29, 2023
  • 0 Comments

ரஸ்யாவில் பெலாரஸ் ஜனாதிபதிக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளதாக பெலாரஸ் எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்த பின்னர் பெலாரஸ் ஜனாதிபதியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மேற்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  கிரெம்ளின் அவருக்கு நஞ்சூட்டியுள்ளது என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பெலாரஸ் ஜனாதிபதி லுகாசென்கோவின் உடல்நிலை பாதிப்பிற்கான காரணங்கள் வெளியாகாத நிலையில் மேற்படி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில், போருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பவர்கள், திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதும் […]

பொழுதுபோக்கு

புரூஸ் வில்லிஸுக்காக நேரம் ஒதுக்கிய அர்னால்ட்!! உணர்வு பூர்வமான தருணம்…

  • May 29, 2023
  • 0 Comments

பிரபல ஹாலிவுட் நடிகரான புரூஸ் வில்லிஸ் மூளை செல் நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் அவருக்கு தனது அன்பை பகிர்ந்துள்ளார். ஒரு நபரின் அறிவாற்றல் திறன்களைப் பாதிக்கும் மொழிக் கோளாறான அஃபாசியா நோயால் புரூஸ் வில்லிஸ் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் நடிப்பிலிருந்து விலகுவதாக வில்லிஸின் குடும்பம் இந்த ஆண்டின் பிப்ரவரியில் செய்தியை அறிவித்தது. இந்த நிலையில், புதிய நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியான FUBAR ஐ விளம்பரப்படுத்த அளித்த புதிய நேர்காணலில், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் வில்லிஸுக்கு அனுதாபம் தெரிவிக்க சிறிது […]