இலங்கை செய்தி

முடிந்தால் நீதிபதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து பாருங்கள் : அனுரகுமார திஸாநாயக்க சவால்!

  • April 11, 2023
  • 0 Comments

உயர்நீதிமன்றத்தின் இடையுத்தரவால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் உறுப்பினர் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரேரணை முற்றிலும் தவறானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், பாராளுமன்றத்தை உயர்நீதிமன்றம் பலப்படுத்தியுள்ளது, முடிந்தால் நீதிபதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து பாருங்கள், அடுத்து நிகழ்வதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனவும் சவால் […]

இலங்கை செய்தி

எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலையும் குறைவடையும் என அறிவிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலரின் பெறுதிக்கு ஏற்ப எதிர்வரம் நாட்களில் எரிபொருளின் விலையும் குறைவடையும் என சபை முதல்வர சுஸில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று சர்வஜன வாக்குரிமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், தற்போதைய நிலைமையில் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைவடையும். எரிபொருள் விலையும் எதிர்வரும் நாட்களில் குறைவடையும். அடுத்ததாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் டொலரின் பெறுமதிக்கு ஏற்றால் போன்று இறக்கப்படும். இதன்போது விலை குறைவடையும். இது மக்களுக்கு கிடைக்கும். […]

இலங்கை செய்தி

பாராளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் சிறப்புரிமை பிரச்சினையை கொண்டுவருவோம் – நளின் பண்டார!

  • April 11, 2023
  • 0 Comments

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் ஜனாதிபதிக்கு எதிராக சிறப்புரிமையை பிரச்சினையை கொண்டுவருவோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அதன் பெறுபேறு எவ்வாறு அமையும் என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரியும். அதனால் அவர் ஒருபோதும் […]

இலங்கை செய்தி

16 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் ஐவர் கைது!

  • April 11, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் 16 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கங்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் நேற்று இலங்கை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்  இந்திய பிரஜை ஒருவரும்  உள்ளடங்குகின்றார். சந்தேக நபர்களிடமிருந்து 10.5 கிலோ தங்கத் தகடுகள், ஜெல்

இலங்கை செய்தி

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை இடைநிறுத்த கோரி மனுத்தாக்கல்!g

  • April 11, 2023
  • 0 Comments

தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான முறையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கக் கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த அடிப்படை உரிமை மனுவில் பிரதிவாதிகளாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர். தனது மனுவை விசாரித்து இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் […]

இலங்கை செய்தி

கள்ளத்தொடர்பால் பறிபோன பெண்ணின் கூந்தல்; சிலாபத்தில் அரங்கேறிய சம்பவம்!

  • April 11, 2023
  • 0 Comments

இரண்டு பிள்ளைகளின் தாயை தாக்கி அவரது கூந்தலை அறுத்த சம்பவம் தொடர்பாக பெண்ணொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம், அம்பகந்தவில பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளதுடன் அவரது கணவர், ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் தொழில் செய்து வருகிறார்.தனது கணவருடன் குறித்த பெண் தகாத தொடர்பில் இருந்ததாக எழுந்த சந்தேகம் காரணமாக அப்பெண் தாக்கப்பட்டு, கூந்தல் அறுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.வெட்டப்பட்ட கூந்தலை சந்தேக நபர்களான பெண்கள் எடுத்துச் சென்றுள்ளனர் சம்பவம் குறித்து தாக்குதலுக்கு […]

இலங்கை செய்தி

இலங்கை அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை அரச ஊழியர்கள் அரச விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது தொடர்பில் விசேடமாக ஆராய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள சகல தொழில் வாய்ப்புக்களுக்குமான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளின் போது இவ்வாறு செயற்படுதாக தெரியவந்துள்ளது தற்போது, அரச சேவையில் உயர் பதவிகளில் கூட அரச விரோத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் நாசகார மனநிலை கொண்டவர்கள் இருப்பதாகவும், அவர்கள் தந்திரமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதாகவும் கிடைத்துள்ள புலனாய்வு […]

இலங்கை செய்தி

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிக்க காரணம் வெளியானது!

  • April 11, 2023
  • 0 Comments

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்குப் பல காரணிகள் காரணமாக அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க இதனை தெரிவித்துள்ளார். பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையும் இந்த நிலைமைக்கு மற்றொரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதி மீண்டும் உயரலாம் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்திருந்த கணிப்பு தொடர்பில் பேராசிரியர் தனது […]

இலங்கை செய்தி

இலங்கையில் டொலரைக் கொடுத்து ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் மக்கள்

  • April 11, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்றது. இதனால், கொழும்பு பிரதான நாணயமாற்று நிலையங்களில், டொலரைக் கொடுத்து, ரூபாவைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது. எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின்படி, நேற்றைய தினம், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 307.36 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 325.52 ரூபாவாகவும் இருந்தது. இந்த நிலையில், இன்றைய […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – ஒன்றரை வயது மகளுக்கு தந்தை செய்த செயல்

  • April 11, 2023
  • 0 Comments

பக்கமுன பிரதேசத்தில் ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வெயாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பக்கமுன பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளான ஒன்றரை வயது சிறுமி முன்னதாக தனது பாட்டியின் பராமரிப்பில் வெயாங்கொடையில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார். அங்கிருந்து பக்கமுன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளார். சிறுமி மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ காட்சிகளை பாட்டிக்கு பலமுறை […]

You cannot copy content of this page

Skip to content