உலகம் செய்தி

ஏமனில் 17 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிப்பு

  • May 29, 2023
  • 0 Comments

ஏமன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 17 மில்லியன் மக்கள் இன்னும் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை காட்டுகிறது. அரபு உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஏமன், சிறிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் மற்றும் உள்நாட்டுப் போர்களின் வருவாய் குறைந்து வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வேலையின்மை, உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஏமன் […]

இலங்கை செய்தி

மைத்திரியின் சகோதரரின் ஒரு கோடி ரூபா பெறுமதியான மோதிரம் திருட்டு

  • May 29, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரிடமிருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான நீலக்கல் கொண்ட மோதிரத்தை திருடிய நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பொலன்னறுவை லக்ஷ் உயன பிரதேசத்தில் வசிக்கும் அவரது வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் பெலியத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இந்த திருட்டைச் செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோதிரத்திற்கு மேலதிகமாக ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஒரு இலட்சம் இலங்கை நாணயங்களும் குறித்த ஊழியரால் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் […]

இலங்கை செய்தி

கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கு வெளிநாட்டு இலங்கையர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு

  • May 29, 2023
  • 0 Comments

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டு மற்றும் கடவுச்சீட்டு புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இடம்பெற்றதுடன், அதில் கலந்துகொண்ட குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த ஜுன் 01ஆம் திகதி முதல் செயற்படுவதாக தெரிவித்தனர். வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் தங்கள் நாடுகளில் […]

இலங்கை செய்தி

மதுபோதையால் நேர்ந்த சோகம் – கிளிநொச்சியில் ஒருவர் உயிரிழப்பு

  • May 29, 2023
  • 0 Comments

கிளிநொச்சியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபொழுது ஒருவர் உயிரிழந்துள்ளார். தருமபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தியாகராசா சஞ்சீவன் – 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிழந்துள்ளார். காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அதிக மது போதையில் பயணித்ததாலே […]

ஐரோப்பா செய்தி

ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்கு உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல்

  • May 29, 2023
  • 0 Comments

உக்ரைன் பாராளுமன்றம் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைப் பொதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது ஒரு வருடத்திற்கும் மேலாக உக்ரைன் மீதான படையெடுப்பின் போது மாஸ்கோவிற்கு ஆயுதங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டிய ரஷ்ய நட்பு நாடாகும். படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்து, தலைநகர் கெய்வ் மீதான மிகப்பெரிய தாக்குதலில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரைன் கூறிய ஒரு நாள் கழித்து, இந்த நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. “ஈரானை முழுவதுமாக தனிமைப்படுத்தும் பாதையில் ஒட்டுமொத்த நாகரீக உலகத்தின் நடவடிக்கைகளுடன் […]

இந்தியா விளையாட்டு

மீண்டும் மழை காரணமாக இறுதிப்போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தம்

  • May 29, 2023
  • 0 Comments

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 170 – 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 29 வயது இளைஞன் பலி

  • May 29, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்தநிலையில் பின்னால் வேகமாக வந்த லொறியின் சக்கரம் அவரது தலைக்கு மேல் ஏறியதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மீசாலையைச் சேர்ந்த இராஐரட்ணம் அபிதாஸ் என்கிற 29 வயதானவரே இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் […]

ஆசியா செய்தி

சவூதி அரேபியாவில் இரண்டு பஹ்ரைனியர்களுக்கு மரண தண்டனை

  • May 29, 2023
  • 0 Comments

“பயங்கரவாத” நடவடிக்கைகளுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பஹ்ரைனியர்களை சவூதி அரேபியா கொலை செய்துள்ளது என்று சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் இதேபோன்ற மரணதண்டனைகளின் எண்ணிக்கையை ஒன்பதாக உயர்ந்துள்ளது. ஜாபர் சுல்தான் மற்றும் சாதிக் தாமர் என அடையாளம் காணப்பட்ட பஹ்ரைன் பிரஜைகள், “பஹ்ரைனில் தேடப்படும் ஒரு நபர் தலைமையிலான பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக” குற்றம் சாட்டப்பட்டதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பஹ்ரைன் அதிகாரிகளிடமிருந்து உடனடி எதிர்வினை எதுவும் இல்லை. மே […]

இலங்கை செய்தி

யாழ் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழி – இரு பெண்கள் உட்பட மூவர் கைது

  • May 29, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு இன்று கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடத்தி மூவரைக் கைது செய்துள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய […]

செய்தி

எதிர்பாராத ஒன்று 40 வயதில் நடந்துள்ளது! உருகினார் தனுஷ்

  • May 29, 2023
  • 0 Comments

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா, மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நடிகர் தனுஷுக்கு 40வயதில் யூத் ஐகான் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது. யூத் ஐகான் விருதை பெற்றுக்கொண்ட தனுஷ், இது தான் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு என்று உருக்கமாக பேசியுள்ளார். துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், […]