மைத்திரியின் சகோதரரின் ஒரு கோடி ரூபா பெறுமதியான மோதிரம் திருட்டு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரிடமிருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான நீலக்கல் கொண்ட மோதிரத்தை திருடிய நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பொலன்னறுவை லக்ஷ் உயன பிரதேசத்தில் வசிக்கும் அவரது வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் பெலியத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இந்த திருட்டைச் செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோதிரத்திற்கு மேலதிகமாக ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஒரு இலட்சம் இலங்கை நாணயங்களும் குறித்த ஊழியரால் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 18 times, 1 visits today)