கண் சொட்டு மருந்து பயன்படுத்தி 14 பேர் பார்வையிழப்பு, 4 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் கண்களில் சொட்டு மருந்து போட்டுக்கொண்ட 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும், 14 பேர் பார்வையிழந்துள்ளதுடன், 4 பேருடைய கண்கள் அகற்றப்பட்டுள்ளன. அமெரிக்காவில், கண்களில் ஒரு குறிப்பிட்ட சொட்டு மருந்தைப் போட்டுக்கொண்ட 81 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.Artificial Tears என்னும் கண் மருந்தின் 10 பிராண்ட்கள், குறிப்பாகச் சொன்னால், EzriCare Artificial Tears என்னும் கண் மருந்துதான் அதிக அளவில் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.இந்த மருந்தைப் பயன்படுத்திய 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். 14 பேர் […]