ஐரோப்பா செய்தி

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலாக போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சீனாவிடம் வலியுறுத்தும் ஜேர்மனி!

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலாக போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சீனாவிடம் வலியுறுத்தும் ஜேர்மனி! ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதை தவிர்க்குமாறு ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஜேர்மன் பாராளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலாக உக்ரேனில் இருந்து ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கு மாஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக நாடு தற்காத்துக் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 1.2 பில்லியன் பவுண்ட் பேட்டரி சேமிப்பு திட்டத்தை ஆரம்பிக்கும் Masdar நிறுவனம்!

  • April 13, 2023
  • 0 Comments

எமிரேட்ஸின்  Masdar  நிறுவனம் பிரித்தானியாவில் பேட்டரி சேமிப்பு திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச எரிசக்தி வாரத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த   Masdar  நிறுவனத்தின் சி.ஈ.ஓவான முகமது ஜமீல் அல் ரமாஹி இந்த அறிவிப்பை வெளியிட்டார். குறித்த திட்டம் 1.2 பில்லியன் பவுண்டுகள் செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்தார். இங்கிலாந்தில் ஏற்கனவே 4 பில்லியன் பவுண்டுகளை சுத்தமான எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்துள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார். அபுதாபி ஃபியூச்சர் எனர்ஜி நிறுவனமான   Masdar  அபுதாபி நேஷனல் ஆயில் […]

ஐரோப்பா செய்தி

கிரீஸ் ரயில் விபத்து : அரசாங்கங்களின் அலட்சியத்தால் ஏற்பட்டது என தொழிற்சஙகம் முழக்கம்!

  • April 13, 2023
  • 0 Comments

கிரீஸ் ரயில் விபத்தில் 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கிரேக்க ரயில்வே ஊழியர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கிரீஸின் ரயில்வே ஊழியர்களின் கூட்டமைப்பு 24 மணி நேர பணிபகிஸ்கரிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது அரசாங்கங்களின் அலட்சியத்தால் ஏற்பட்டது எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக நிரந்தர பணியாளர்களை சேர்ப்பது, சிறந்த பயிற்சி மற்றும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான எங்கள் நிலையான கோரிக்கைகள் நிரந்தரமாக குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைனிய குழு : மக்களை அச்சுறுத்தியதாக தகவல்!

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனிய உளவுக் குழுவொன்று பிரையன்ஸ்க் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைனிய உளவுக் குழுவானது சுஷானி கிராமத்தில் நுழைந்ததாகவும், அங்கிருந்த மக்களை அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 பேர் கொண்ட குறித்த குழுவினர், வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகளை பிரயோகித்ததாகவும் தெரிவிக்கப்ப்டுள்ளது. சுஷானி நகரில் ஒரு மின் துணை நிலையம், எரிவாயு நிலையமும் வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படடுள்ளது. அதேநேரம் லியுபெச்சன் கிராமத்தில் பணயக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

24 மணி நேரத்தில் 170 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா!

  • April 13, 2023
  • 0 Comments

பக்முட் நகரில் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய படையினர் கடந்த 24 மணி நேரத்தில் 170 ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல்களை உக்ரைன் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பிராந்தியங்களில் 14 ரொக்கட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அமைச்சம் குறிப்பிட்டுள்ளது. இரண்டு போர் ட்ரோன்கள், மற்றும் 58 சால்வோ ரொக்கெட் தாக்குதல்கள் உட்பட 21 வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் […]

ஐரோப்பா செய்தி

சபோரிஜியாவில் ரஷ்ய படையினர் ஏவுகணைத் தாக்குதல் மூவர் பலி

  • April 13, 2023
  • 0 Comments

சபோரிஜியாவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு நகரத்தின் மீதான குறித்த தாக்குதலில், குடியிருப்பு கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் இருந்து இதுவரை 11 பேரை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஐரோப்பா செய்தி

அணு ஆயுத போர் தொடர்பில் ரஷ்யா பரபரப்பு எச்சரிக்கை

  • April 13, 2023
  • 0 Comments

முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் அணு ஆயுத போர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் மேற்கத்திய நாடுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை நிறுவனருமான டிமிட்ரி மெட்வெடேவ் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஆணித்தரமாக கூறினார். மேலும் அவ்வாறு நிறுத்தாவிட்டால் கடுமையான அணு ஆயுத போருக்கு உட்பட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ரஷ்யாவின் முடிவு உக்காரனுக்கு முன்னிலையில் என்றுமே […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் கலங்கரை விளக்கத்தில் மோதிய அலை – முக வடிவத்தில் எதிரொலித்த காட்சி

  • April 13, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள கலங்கரை விளக்கத்தில் மோதிய அலை முக வடிவில் தோற்றமளித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவில் நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட் என்பவர் கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்ததில் இருந்து வெளிவருவதற்கு புகைப்பட கலைஞராக மாறி பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை நிகழ்வுகளை புகப்படங்களாக எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து பிரித்தானியாசதர்லாந்து பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்வுகளை  புகைப்படங்களாக […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் வாழ்வாதார செலவுகளினால் ஸ்தம்பித்த துறைகள்!

  • April 13, 2023
  • 0 Comments

ஜெர்மனி தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்ததை அடுத்து வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் நடைப்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் ஜெர்மனியின் தொழிற்சங்கமான  way D என்ற தொழிற்சங்கமானது பல பணியாளர்களை பணி புறக்கணிப்பில் ஈடுப்படுமாறு வேண்டிருந்தது. அதாவது ஜெர்மனியில் தற்போது வாழ்வாதார செலவுகள் அதிகரித்து காணப்படுவதால் தங்களது சம்பளம் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையிலேயே இந்த பணியாளர்கள் சம்பள உயர்வையை வேண்டி இவ்வகையான பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டிருந்தார்கள். குறிப்பாக பொது போக்குவரத்தில் பணியாற்றுபவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டிருக்கின்றார்கள். […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யா வானத்தில் மர்ம பொருள் – இரத்து செய்யப்பட்ட விமானச் சேவைகள்

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்ய வானத்தில் அடையாளம் தெரியாத ஒரு பொருள் தென்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. St. Petersburg நகரிலுள்ள Pulkovo விமானநிலையம், எல்லா விமானச் சேவைகளையும் தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன. அந்தப் பொருள் ஆளில்லா வானூர்திபோல் தென்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிவரை எல்லா விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டதாக, St. Petersburg நகரத்தின் அதிகாரத்துவ Telegram தளத்தில் தெரிவித்தது. ஆனால், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. Pulkovo விமான நிலையத்தின் 200 கிலோமீட்டர் […]

You cannot copy content of this page

Skip to content